சில சிந்தனைகள் - 2
எழுத்தாளர் சுஜாதா - 1
இணயதளத்தில் என்னுடைய முதல் கட்டுரை யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி எழுதுவது என்பதில் எனக்கு சிறிது கூட சந்தேகமில்லை. எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி தான் எழுதுகிறேன். இவர் எனக்கு பரிடச்சியமானது சமீபத்தில் தான். 2007-ல் எனது கல்லூரில் விகடன் பிரசுரம் புத்தக கண்காட்சி போட்டனர். எனக்கோ புத்தகம் படிக்க ஆர்வம் அதிகம். ஆனால் அந்த நேரம் பார்த்து கையில் காசு இல்லை. என்னுடன் பணிப்புரியும் ஒருவரிடம் கடன் வாங்கி (105 ரூபாய்) ஏன்? எதற்கு? எப்படி? என்ற சுஜாதாவின் புத்தகத்தை வாங்கினேன். அன்று முதல் சுஜாதா என்னுள் நுழைந்துவிட்டார். அவருடைய எளிமை நடையும், நுணுக்கமும் பிடித்துப்போய் விட்டது. அன்றிலிருந்து சுஜாதாவின் புத்தகங்கங்களைத் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறேன்.
தற்போது என் வீட்டில் உள்ள புத்தகங்களில் பெரும்பான்மை அவருடையது. அவருடைய பல புத்தகங்களின் இ-புக்-களும் வைத்துள்ளேன். ஏன்? எதற்கு? எப்படி?-க்கு பிறகு அவருடைய விஞ்ஞான சிறுகதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அதுவும் என்னை மிகவும் கவர்ந்தது. நானும் அதனைத் தொடர்ந்து விஞ்ஞான சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன். (அதற்கு முன் கட்டுரைகள் மட்டும் எழுதிவந்தேன்). அந்த வகையில் சுஜாதா என் எழுத்துலக குரு.
அவருடைய ”ஏன்? எதற்கு? எப்படி?”, விஞ்ஞான சிறுகதைகள், சிறுகதை தொகுப்புகள், ஸ்ரீரங்கத்து தேவதைகள், மெரினா, நயகரா, கற்றதும் பெற்றதும் (பாகம் 1-5), கணையாழியின் கடைசிப் பக்கங்கள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ என அனைத்தும் டாப். அவருடைய ’கடவுள்’ புத்தகம் அவர் குமுதம் மற்றும் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் அவர் எழுதியதைத் தொகுத்தப் புத்தகம். அதைப் படித்தால் நவீன இயற்பியலின் அனைத்தையும் தமிழிலேயே தெரிந்துக் கொள்ள முடியும்.
அவருடைய ”கரையெல்லாம் செண்பகபூ” மற்றும் “விக்ரம்” முதலிய நாவலைப் படமாக பார்த்துள்ளேன். படித்ததில்லை. அதேப்போல் அவருடைய மற்ற நாவல்களை முழுவதுமாக படித்ததில்லை. இனிதான் படிக்கவேண்டும். மெதுவாக அனைத்தையும் படித்துவிடுவேன். எனக்குத் தெரிந்து எழுதுவதில் ஒரு புரட்சியை சப்தமில்லாமல் செய்தவர் சுஜாதா.
நான் சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோது அவர் வாழ்ந்த வீட்டை பார்த்து போட்டோ எடுத்து வந்தேன். வீடு வேறுயாரிடமோ கைமாறிவிட்டதாம். அக்கம் பக்கத்தினர் சொன்னார்கள். அதனால் வீட்டினுள் சென்றுப் பார்க்க முடியவில்லை. அவருடைய உறவினர் ஒருவரை சந்தித்துப் பேசினேன். அவருடைய அலுவலகத்தில் தான் சுஜாதா வழக்கமாக அமர்ந்திருப்பாராம். அந்த அறையில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். சுற்றிப்பார்த்தேன். சுஜாதா இறந்ததைப் பற்றி அவர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அவரிகளிடமிருந்து சுஜாதாவின் போட்டோ ஒன்று வாங்கிவந்தேன். நியாபகார்த்தமாய்.
அவர் வசனம் எழுதிய முதல்வன், இந்தியன், ரோஜா, தசாவதாரம் போன்ற படங்கள் வெற்றி பெற்ற போதிலும், பாரதிராஜாவின் நாடோடித் தென்றல், பாலச்சந்தரின் நினைதாலே இனிக்கும் சரியாக் போகாததற்கு காரணம் பற்றி சிறிது யோசிக்கிறேன். அதற்கு சுஜாதா கூறிய காரணம் சரிதான் என்றும் தோன்றுகிறது.
“'Ninaithale Inikkum' for Balachandar was the first script I wrote for a film. Before that, my stories had been filmed, but I had not played any role in writing the screenplay or dialogue. For 'Ninaithale Inikkum,' I had written a totally different kind of screenplay. Unfortunately, owing to constraints like star dates, Balachandar did not follow my script exactly. He made several changes and looked at the film as an opera on the lines of Abba. My original script was lively and if it had been faithfully followed,it would have been a model screenplay. Anyway, no regrets and I enjoyed working with Balachandar, his assistant Ananthu, Kamal and Rajni.
The same was the case with Bharathi Raaja's 'Nadodi Thendral.' The original story I gave was about the assassination of a collector and I had put in a lot of effort. But Bharathi Raaja changed it into an ordinary triangular love story set in the pre independence backdrop.
I don't blame the directors for these failed projects. As I told you. the target audiences are different and the directors know the medium better.
My most satisfying efforts were Mani Ratnam's 'Roja' and Shankar's 'Indian,' though I wrote only the dialogue for these films. 'Roja' especially was a gratifying experience because I participated in all the discussions during its making. For 'Indian,' the director did the thinking, gave me the sequence order and after I wrote the dialogue, Shankar would choose what he wanted.”
(அவர் ஒரு பேட்டியில் கூறியது. அதன் Copy என்னிடம் உள்ளது)
அவர் மறைவு எனக்கு பெரிய இழப்பாக அப்போது தோன்றவில்லை. ஆனால் நாள்பட நாள்பட நான் அவர் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தப்பின் நான் ஒவ்வொரு நாளும் வருத்தப்படுகிறேன். அவரை நேரில் சந்திக்காமல் விட்டதற்காக வருத்தப்படுகிறேன். அவர் தனது கட்டுரையில் மெரினா பீச்சில் வாக்கிங் சென்றதாகவும், சிட்டி செண்டர் லாண்ட் மார்கில் (LandMark) பேசியதாகவும், டிசம்பரில் கச்சேரிகளில் கலந்து கொண்டதாகவும் எழுதியதை படிக்கும் போது மனது கனக்கிறது. கண்ணுக்கெட்டும் தூடத்தில் இருந்தும் அவரை பார்க்கவில்லை என்று.
மண்ணி (சுஜாதாவின் மனைவி) தற்போது மயிலாப்பூரில் தனியாக வசிக்கிறார் எனக் கேள்விப்பட்டேன். அவரை சென்று காண வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களை தொந்தரவு செய்ய விரும்பாமததால் போகவில்லை. அவருடைய சகோதரர் ஸ்ரீரஙத்தில் உள்ளார். மகன்கள் வெளிநாட்டில் உள்ளனர். சுஜாதா தன் கடமைகளை முடித்துவிட்டு தான் பிரிந்தார் ’ரங்கராஜனாக’ (உண்மையான பெயர்). சுஜாதாவாகவும் அவர் தன் கடமைகளை ந்னறாகவே முடித்தார் என்றாலும் நாம் அவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்று தான் தோன்றுகிறது. அதற்குள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். எனக்கு அவரை சரியாகத் தெரியத் துவங்கும் போது அவர் நம்மோடில்லை. அவரின் மரணத்தின் போது அவரைப் பற்றி அவர் வாழும்போதே தெரிந்துவைக்கவில்லையே என்று எனக்கு வருத்தம். பொதுவாகவே பிரபலங்களின் மரணத்திற்குப் பின் இது மாதிரி நடக்கிறது. அவர் வாழும் போது அவரைப் பற்றி தெரிந்து வைக்கவில்லையே என்று.
வினோகுமார் 30.11.2010
(தொடரும்)