தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Saturday, November 27, 2010

அறிமுகம்

சில சிந்தனைகள் - 1

அறிமுகம்

பொதுவாகவே எழுதுவது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பல அறிவியல் புனைச் சிறுகதைகளையும், சில அறிவியல் மற்றும் சில அறிவியல் விளக்கங்களும் தமிழில் எழுதியுள்ளேன்.

என் நண்பர்கள் சிலர் நான் எழுதியதை படிக்கக் கேட்கிறார்கள். இரண்டு காரணங்களுக்காக நான் அதனை கொடுப்பதில்லை.         1.அவர்களுக்கு அறிவியல் தெரியாது என்றால். (என்ன சார் எழுதியிருக்கீஙக. ஒண்ணுமே புரியலஎன்பார்கள்.             2.ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.எனவே இதைத் தவிர்க்கும் வகையில் அறிவியலை தமிழில் எளிமையாக தர எண்ணினேன். அதனை என்னுடைய blog-லும், orkut மற்றும் facebook ல் அதன் link-கும் தர நினைக்கிறேன்.

எழுதுவதென்றால் எப்படி? நான் சுஜாதாவின் ரசிகன். சுஜாதா அம்பலம்.காம்-ல் கட்டுரைகள் எழுதி வந்தார். அதுவே பின்னர் “இன்னும் சில சிந்தனைகள்என்று புத்தகமாக வெளிவந்தது. எனவே அதையே பின்பற்றி நானும் எழுதவுள்ளேன். ஆனால் “இன்னும் சில சிந்தனைகள் என்ற தலைப்பு எனக்கு சரிப்பட்டு வராது. நான் இப்போது தான் சிந்திக்கவே போகிறேன். எனவே “சில சிந்தனைகள் என்ற தலைப்பில் எழுத விழைகிறேன். கம்யூட்டரில் எழுதுவதால் ஒரு பக்கத்திற்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெல் படிப்பவர்களுக்கு தூக்கம் வரும். புத்தகம் மாதிரி வசதியாக படுத்துக்கொண்டு படிக்க முடியாது. இருந்தும் சுவாரஷ்யமாக எழுதினால் இரண்டு பக்கம் படிக்கலாம். முயற்சிக்கிறேன்.

உங்கள் ஆதரவிற்கும், கருத்திற்க்கும் காத்திருக்கிறேன்.

27.11.2010

3 comments:

Unknown said...

gud..keep doin dis gud wrk...all d best...

Unknown said...

hmm........ all the very best........:)

Sithu said...

good attempt,proceed.
with regards
N.Sithu