தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Friday, December 3, 2010

எழுத்தாளர் சுஜாதா - 2


                      சில சிந்தனைகள் - 3
                     எழுத்தாளர் சுஜாதா - 2
        அவர் தனது 70வது பிறந்தநாள் தினத்தன்று எழுதிய கட்டுரை என்னிடம் உள்ளது. மிகவும் நெகிழ்ச்சியான கட்டுரை. அதை அவரால் மட்டும் தான் அந்த மாதிரி எழுத முடியும். அந்த வயதிற்கே உண்டான பக்குவமும், அதே நேரத்தில் இளமையும் இருக்கும். அவருடைய மறதியைப் பற்றியும், மரணத்திற்கு பின் சொர்கம்  நரகம் என்று இல்லை என்றும், அப்படி இருந்தால் நரகத்துக்குத் தான் போகவேண்டும் என்றும் சொல்வார். ஏனெனில் அங்கேத்தான் சுவாரசிய ஆசாமிகள் கிடைப்பார்கள். சொர்கத்தில் வெறும் பஜனை சத்தம், தனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது என்பார். மறுபிறவியில் நம்பிக்கையில்லை என்பார். அப்படி ஒரு வேலை மறுபிறவியில் சுசர்லாந்தில் பிறந்தால் பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன் என்று கலாய்ப்பார்.  ’ரோஜா’ படம் வெளிவந்த போது பெங்களுரில் ‘அரவிந்த் சாமியை திருமணம் செய்து வை’ என்று ஒருப் பெண் அதிகாலை கதவைத் தட்டியது, ”ஆ” கதையைப் படித்துவிட்டு ”என் மகளை  திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று திருநல்வேலியில் இருந்து ஒரு மனநலம் சரியில்லாத இளைஞர் கேட்பது, “பாலம்” கதையைப் படித்துவிட்டு தன்னைக் கொல்ல தேதி கேட்டு வந்த கோவை வாசி என பலதரப்பட்ட வாசகர்களை தான் கொண்டிருந்ததாக் நம்மிடம் பகிர்ந்துக் கொள்வார். அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. அதை தினமும் படிக்கும் போது வருந்துவேன். அவரை ஒருமுறைக் கூட பார்க்கவில்லையே என்று. ஆனால் அவர் அடிக்கடி சொல்வது நமக்கு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்க்கக் கூடாது . அந்த எழுத்தாளர் மீது இருக்கும் அபிப்ராயம் போய்விடும்” என்பார்.
            வாராவாரம் சனிக்கிழமையன்று அம்பலம்.காமில் வணக்கம் நண்பர்களே என்று சாட்டுக்கு வந்து விடுவார். தனது வாசகர்களுடன் வாராவாரம் சாட் செய்யும் தமிழ் எழுத்தாளர் இவர் ஒருவர் தான்.  writersujatha@hotmail.com என்ற மெயிலிலும் பதிலளிப்பார். ரத்தின சுருக்கமாய் எழுதினால் பதில் கண்டிப்பாய்  அனுப்பிவிடுவார். ஒரு பெண் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில், Nobody dies; they live in memories and in the genes of their children. How True ? A great writer sujatha.

தற்போது அவர் புத்தகங்கள் சிலவற்றை உயிர்மை பதிப்பகத்திலிருந்து வாங்கப்போகிறேன். அவை
  1. தமிழ் அன்றும் இன்றும்.
  2. நானோ டெக்னாலஜி
  3. 60 அமெரிக்க நாட்கள்
  4. கடவுளின் பள்ளத்தாக்கு
  5. உயிரின் ரகசியம்
  6. பார்வை 360 சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள்
  7. ஹைக்கூ – ஒரு எளிய அறிமுகம்
  8. புதிய நீதிக் கதைகள்
  9. தலைமைச் செயலகம்
அவரைப் பற்றி சில:

பிறப்பு எஸ்.ரங்கராஜன், மே 3 1935, திருவல்லிக்கேணி, சென்னை.

இறப்பு பிப்ரவரி 27 2008 (வயது 72), சென்னை

புனைப்பெயர் சுஜாதா

தொழில் பொறியாளர், எழுத்தாளர்

மனைவிப் பெயர் சுஜாதா ரங்கராஜன்

பிள்ளைகள் கேசவா பிரசாத், ரங்கா பிரசாத்

புத்தகங்கள்

நாவல்கள்

பதவிக்காக
ஆதலினால் காதல் செய்வீர்
பிரிவோம் சந்திப்போம்
அனிதாவின் காதல்கள்
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
நிலா நிழல்

கரையெல்லாம் செண்பகப்பூ
யவனிகா
கொலையுதிர் காலம்
வசந்த் வசந்த்
ஆயிரத்தில் இருவர்
பிரியா
நைலான் கயிறு
ஒரு நடுப்பகல் மரணம்
மூன்று நிமிஷம் கணேஷ்
காயத்ரி
கணேஷ் x வஸந்த்
அப்ஸரா
மறுபடியும் கணேஷ்
வீபரீதக் கோட்பாடுகள்
அனிதா இளம் மனைவி
பாதிராஜ்யம்
24
ரூபாய் தீவு
வசந்தகாலக் குற்றங்கள்
வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
கனவுத்தொழிற்சாலை
ரத்தம் ஒரே நிறம்
மேகத்தைத் துரத்தினவன்
நிர்வாண நகரம்
வைரம்
ஜன்னல் மலர்
மேற்கே ஒரு குற்றம்
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
நில்லுங்கள் ராஜாவே
எதையும் ஒருமுறை
செப்டம்பர் பலி
ஹாஸ்டல் தினங்கள்
ஒருத்தி நினைக்கையிலே
ஏறக்குறைய சொர்க்கம்
என்றாவது ஒரு நாள்
நில் கவனி தாக்கு
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
பெண் இயந்திரம்
சில்வியா

குறுநாவல்

"
ஆயிரத்தில் இருவர்"
"
தீண்டும் இன்பம்"
"
குரு பிரசாத்தின் கடைசி தினம்

சிறுகதை

ஸ்ரீரங்கத்துக் தேவதைகள்
சிறுகதை தொகுப்புகள்

நாடகம்

Dr.
நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
கடவுள் வந்திருந்தார்


கட்டுரை

கணையாழியின் கடைசி பக்கங்கள்
கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5]
கடவுள் இருக்கிறாரா
தலைமை செயலகம்
எழுத்தும் வாழ்க்கையும்
ஏன் ? எதற்கு ? எப்படி ?
சுஜாதாட்ஸ்
இன்னும் சில சிந்தனைகள்
தமிழ் அன்றும் இன்றும்
உயிரின் ரகசியம்
நானோ டெக்னாலஜி
கடவுள்களின் பள்ளத்தாக்கு
ஜீனோம்
திரைக்கதை எழுதுவது எப்படி?

திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்

காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம் வசப்படும்
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்


பணியாற்றிய திரைப்படங்கள்

ரோஜா
இந்தியன்
ஆய்த எழுத்து
அந்நியன்
பாய்ஸ்
முதல்வன்
விசில்
கன்னத்தில் முத்தமிட்டால்
சிவாஜி பாஸ்
செல்லமே
தசாவதாரம்
எந்திரன்

அவரைப் பற்றி பலருக்கு தெரியாத சில விஷயங்கள்

  1. டாக்டர்.அப்துல் கலாமின் கல்லூரி வகுப்புத் தோழன்.
  2. நாம் இப்போது உபயோகிக்கும் மின்னணு வாக்காளர் இயந்திரம் உருவானதில் முக்கிய பெரும் பங்கு வகித்தவர்,
  3. இந்த எந்திரத்தை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
  4. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது
  5. பெரும்பாலான இசைக் கருவியை வாசிக்கக் கூடியவர். அதையும் தானாகவே பழகிக்கொண்டார்.
     எனக்கு ஒரு பாரசீக கவிதை நினைவில் வருகிறது. நாம் பிறக்கும் போது எல்லாரும் சிரிப்பார்கள். நாம் அழுவோம். நாம் இறந்தப்பின் அனைவரும் அழுவார்கள், ஆனால் நாம் சிரித்துக் கொண்டிருக்கும் படி வாழ்க்கையை வாழவேண்டும்என்று அக்கவிதையின் பொருள் அமையும். சுஜாதாவும் அவ்வாரே சிரித்துக் கொண்டிருப்பார் என நம்புவோம்.  
     என் வாழ்நாளில் மறக்கவே முடியாத சம்பவம் எனில் ஸ்ரீரங்கத்தில் சுஜாதாவின் வீட்டை  என் நன்பருடன் பார்த்துவிட்டு வந்தப் பின் என் நண்பர் கேட்டார் ”சுஜாதாவா? எழுத்தாளரா?. யாருடா அந்தப் பொண்ணு?”(!) என்று. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
                                    வினோத் குமார்
                                       03.12.2010

3 comments:

Anonymous said...

Sujathava niraya miss pandren, ennai pontravargalum science a purinthu kollumpadi seithavar.... Been gal eluthuvathu konjam aaruthal

Anonymous said...

Sujathava niraya miss pandren, ennai pontravargalum science a purinthu kollumpadi seithavar.... Been gal eluthuvathu konjam aaruthal

வினோத் குமார் said...

mikka makizhchi. thodanthu padiyungal