தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Tuesday, December 7, 2010

முதல் ஆள் நீதான் – ஐன்ஷ்டீன்

விஞ்ஞானி வாழ்வில் ஒரு நாள்

முதல் ஆள் நீதான் – ஐன்ஷ்டீன்

     ஐன்ஷ்டீன் உடன் பிறந்தரின் மகனுக்குத் திருமணம் நடைபெற்றபோது, புதுமணத் தம்பதியைத் தனிப்பட்ட முறையில் வாழ்த்தினார் அவர்.         சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கையில் 18 மாதக் குழந்தையுடன் அவர்கள் ஐன்ஷ்டீனிடம் வாழ்த்துப் பெற வந்தனர்.

     ஐன்ஷ்டீன் அந்தக் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டவுடன் குழந்தை பலமாக அழ ஆரம்பித்துவிட்டது. குழந்தையின் பெற்றோர் எவ்வளவு சமாதானம் செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.  அவைகளுடைய தர்ம சங்கடமான நிலைமையைப் புரிந்து கொண்ட ஐன்ஷ்டீன் ”டேய் சின்னப் பயலே.. என் வாழ்நாளில், மற்றவைகள் என்னைப் பற்றி உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்லும் முதல் ஆள் நீதான்” என்று சொல்லி குழந்தையின் பெற்றோரைச் சிரிக்க வைத்தார்.

[எதோ ஒரு புத்தகத்தில் எப்போதோ படித்த செய்தியை நினைவுப்படுத்தி எழுதியிருக்கிறேன்]
                                                     வினோத் குமார்

No comments: