தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Friday, December 10, 2010

சுஜாதா பற்றி திருமதி சுஜாதா

சுஜாதா பற்றி திருமதி சுஜாதா

     சுஜாதாவின் புத்தகம் ஒன்றை நெட்டில் தேடிகொண்டிருக்கும் போது என் பார்வையில் பட்டது இந்த பேட்டி. நிஜ சுஜாதா (சுஜாதாவின் மனைவி) சுஜாதா (ரங்கராஜன்) பற்றி பேசியிருக்கிறார். இதோ உங்கள் பார்வைக்கு.

சுஜாதா பற்றி திருமதி சுஜாதா

   ஆபீஸ் முடிந்து வந்தால் கிடுகிடுன்னு எழுத உட்கார்ந்து விடுவார். ராத்திரிகளில் கூட அவர் எந்த நேரம் தூங்குவார்னு தெரியாது. ஒரு மணியோ, ரெண்டு மணியோ கூட ஆகும். பசங்க என்ன வகுப்பு படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, எப்போ பரீட்சை, எதுவுமே அவருக்குத் தெரியாது. நாங்க வெளியூர் போயிருந்தால் வீட்டை பூட்டிட்டு வெளியே போகணும்கிறது கூட அவருக்குத் தெரியாது. கிளம்பி போயிட்டே இருப்பார். சின்ன சின்ன ரெஃப்ரன்ஸ§க்குக் கூட கையில இருக்கிற காசையெல்லாம் போட்டு புத்தகம் வாங்கிட்டு வந்துடுவார். வீட்டுக்குன்னு, குழந்தைகளுக்குன்னு எதிர்கால திட்டம் எதுவும் அவருக்குக் கிடையாது. நல்லவேளை, எங்க வீட்ல பெண் குழந்தை இல்லாததால் இதெல்லாம் பெரிய விஷயமா தெரியலே!...
சில நேரங்கள்ல நினைச்சுப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். ஆனா வெளில காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டே எனக்கு ஏனோ அப்படியரு பயம் இருந்தது. அவர் பெரிய ஜீனியஸ், நான் சாதாரண உணர்வுகளுள்ள மனுஷி என்பதாலேயா? ரொம்பவும் நெருங்கி அல்லது இறங்கி வந்து என் பயத்தை அவர் போக்க முயற்சிக்காததாலா?... எனக்குத் தெரியலே! அவரோட ஐம்பது வயசுக்கு மேலத்தான் அந்த பயம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா போச்சு!
அதுவும் கூட அவருக்கு ஹார்ட் பிராப்ளம் மாதிரி சில உடல் பிரச்னைகள் வந்து, நான் அதிக நேரம் அவருடன் இருந்து பணிவிடை செய்ய ஆரம்பித்த பிறகுதான்.
இவருக்குப் பெண் ரசிகைகள் நிறைய உண்டு. இவர்பீக் இருந்தப்போ எல்லாம் லேடீஸ்கிட்டேயிருந்து மாத்தி மாத்தி போன் கால்ஸ் வந்துட்டே இருக்கும். அதுல சில பெண்கள் சாதாரணமா பேசிட்டு வச்சிடுவாங்க. சிலர், என் குரலைக் கேட்டவுடனே போனை வச்சுடுவாங்க. நான் இல்லாத நேரமா திருட்டுத்தனமா பேசுவாங்க. அப்போல்லாம் மனசுக்கு வருத்தமா இருக்கும். இவர் சாதாரணமா, புகழ் இல்லாத மனிதரா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணும்!

     எங்க ரெண்டு பேரோட இயல்புன்னு பார்த்தா நான் ஒரு துருவம்.... அவர் ஒரு துருவம்தான்! உறவினர்களோட பேசறது, வெளியே அவங்க வீட்டுக்குப் போறது, கோவிலுக்குப் போறது இதெல்லாம் எனக்குப் பிடிக்கும். ஆனால் அவருக்கு இதிலெல்லாம் பெரிய ஈடுபாடு கிடையாது. படிக்கணும்.. படிக்கணும்.. அல்லது எழுதணும்... எழுதணும்!... உண்மையைச் சொன்னா எனக்குக் கதைகள் படிக்கிறதில் எப்போதுமே பெரிய ஆர்வம் இல்லே!... அதெல்லாம் கனவுலக சப்ஜெக்ட்னு தோணும்!... 

(சிநேகிதி இதழுக்கு திருமதி சுஜாதா தந்த பேட்டியிலிருந்து)

                                                                                                                        வினோத் குமார்

1 comment:

Anonymous said...

ungalin edupadu sujathavin mel miga adhigam..