தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Sunday, January 30, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி

       சென்னை புத்தகக் கண்காட்சி. வழக்கம் போல் இந்த வருடமும் சென்றிருந்தேன். ஆனால் முன்பைப் போல் இல்லாமல் இந்த வருடம் ஓரிரு நாட்களைத் தவிர எல்லா நாட்களுமே புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். எனக்கு தெரிந்து நான் ஏழாம் வகுப்பிலிருந்து புத்தக கண்காட்சிக்கு செல்கிறேன் என நினைக்கிறேன்.வழக்கம் போல் இந்த முறையும் சில கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் மற்றும் பதிபகத்தார்களையும் தூரத்திலிருந்தே சந்தித்தேன். ”உங்களை ரொம்ப பிடிக்கும். உங்க கவிதைகளை நிறைய படித்திருக்கிறேன்” என்று கூற நினைத்தும் அது அவர்களுக்கு மிகவும் பழகிப்போயிருக்கும் என்றும், என்னைப் போல் எத்தனைப் பேரை சந்தித்திருப்பார்கள், எத்தனைப் பேர் என்னைப் போலவே கூறியிருப்பார்கள் என்று நினைத்து பேசாமல் விட்டுவிட்டேன். இதில் கொடுமை மனுஷ்யபுத்திரனையும், சாருநிவேதாவையும் சந்தித்துவிட்டு பேசாமல் வந்ததுதான். ஏனெனில் மனுஷ்யபுத்திரன் ஜி-டாக்கில் என்னுடைய நண்பர். (அவரிடம் இதுவரை நேரில் பார்த்து பேசியதில்லை) அவரிடம் பிற்பாடு இதைப் பற்றி கூறிய போது நானும் அவரும் (சாருநிவேதா) இலக்கியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் என்றார். ஐயோ நானும் சந்தித்து பேசியிருக்கலாமே, தமிழ் இலக்கியம் பற்றி இன்னும் தெரிந்துக் கொண்டிருப்பேனே என நினைத்தேன். தவற விட்டேனே.
     கடந்த ஒரு வருடமாக நான் பணத்தை சேர்த்து வைத்தேன் புத்தகம் வங்குவதற்காக. ஆனால் அங்கு தள்ளுபடி விலையில் புத்தகம் வாங்க வேண்டும் என்று என்னுடைய நண்பரும் எழுத்தாளருமான திரு.சச்சிதானந்தமிடம் சொல்லியிருந்தேன். (ஏனெனில் அவர்களுக்கு அதிகமான் தள்ளுபடி விலை) ஆனால் எதிர்பாரத விதமாக அவர் ஆப்பிரேஷன் செய்து வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதால் அவரால் எனக்கு உதவ முடியவில்லை. ஆனால் அப்போதும் அவர் அவருடைய நண்பரிடம் (சந்தியா பதிப்பகத்தில் வேலை செய்கிறார்) ஆனால் நான் அதோடு நின்று விடாமல் என் குருவும் நெருங்கிய நண்பருமான்       டாக்டர். ரமேஷ் குமார் அவர்களிடம் சொல்ல, அவர் அங்கு ஒரு முக்கிய பதிபாலரான  பாலு அவர்களிடம் கூறி தள்ளுபடி விலையில் எளிதாக வாங்கிக் கொடுத்துவிட்டார். இதற்காக உதவிய திரு.சச்சிதானந்தம் அவர்கள், டாக்டர். ரமேஷ் குமார் அவர்கள், திரு. பாலு அவர்கள் மற்றும் சந்தியா பதிப்பகத்தின் நண்பர் என அனைவருக்கும் நன்றி. அவர்களால் சேமித்த பணத்தில் மேலும் சில புத்தகங்கள் வாங்கினேன். மற்றப்படி வழக்கம் போல கலக்கலான பட்டின்றம், சிறந்த புத்தகங்கள் என அனைத்தும் கலக்கல் தான்.
     மிக முக்கியமாக நீண்ட காலமாக நான் வாங்க நினைத்துக் கொண்டிருந்த சுஜாதாவின் புத்தகங்களை இந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.  
புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்:

உயிர்மை பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
1.   உயிரின் ரகசியம் – சுஜாதா
2.   60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா
3.   பார்வை 360 – சுஜாதா
4.   கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
5.   கடவுளின் பள்ளத்தாக்கு – சுஜாதா
6.   ஹைக்கூ – ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா
7.   தமிழ் அன்றும் இன்றும் – சுஜாதா
8.   புதிய நீதிக் கதைகள் – சுஜாதா

கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
9.   காஷ்மீர் – பா.ராகவன்
10. ஜின்னா – தரணி
11. சீனா – விலகும் திரை – பல்லவி அய்யர்
12. கி.மு கி.பி – மதன்
13. ஆர்.எஸ்.எஸ் - பா.ராகவன்

சந்தியா பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
14. புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை – ஆத்தை லில்லி –
தமிழில் சிவ.முருகேசன்
15. வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் – ச.சரவணன்

விசா பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
16. தலைமைச் செயலகம் – சுஜாதா
17. தூண்டில் கதைகள் – சுஜாதா
18. மீண்டும் தூண்டிக் கதைகள் – சுஜாதா
19. ஓரிரு எண்ணங்கள் – சுஜாதா

தமிழினி பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
20. கடல் புறா
21. வானியல் விஞ்ஞானிகள் – ஜெயபாரதன்
22. Organic Intelligence – Within and Beyond – Amalam Stantey

ரமணாச்ரமத்தில் வாங்கிய புத்தகங்கள்:
23. மகரிஷி அருண்மொழி – பால் பிரண்டன் – தமிழில் ஸ்வாமி ஹம்ஸானந்தா
24. மகரிஷி வாய்மொழி

பீக்காக் பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
25. பனிமலை பிரதேசத்துக் கதைகள் – சச்சிதானந்தம்
26. சித்திரா – இரவீந்திரநாத் தாகூர் – தமிழில் – சச்சிதானந்தம்
27. கோமளம் குமரியானது – பண்டித நடேச சாஸ்திரி
28. ஆரண்யம் 1
29. ஆரண்யம் 1
மற்றும்
30. Oxford English Tamil Dictionary
31. Why had the Moon Deceived the Apollo Astronauts 

Monday, January 17, 2011

2010-ல் நான் படித்த புத்தகங்கள்

புத்தாண்டு பிறந்துவிட்டது. எனவே கடந்த ஆண்டை கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன். இதில் நான் கடந்த ஆண்டு வாங்கிப் படித்த மற்றும் நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்த புத்தகங்களை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். நான் எவ்வளவு புத்தகங்கள் படித்து இருக்கிறேன் பார்த்தீர்களா? என்று பெருமைப் பட்டுக் கொள்ள இதனைக் கூறவில்லை. நான் இதைப் பதிவு செய்வதில் வேறு ஒரு காரணம் இருக்கிறது. அதனைக் கடைசியில் கூறுகிறேன். கடந்த வருடம் நான் வாங்கிய, படித்த, படித்துக் கொண்டிருக்கிற புத்தகங்கள் கீழ்வருமாறு

1.   விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா
2.   கடவுள் – சுஜாதா
3.   சுஜாதாவின் சிறுகதைகள்
4.   விக்ரம் – சுஜாதா
5.   ஸ்ரீரங்கத்து தேவதைகள் – சுஜாதா
6.   ஆ - சுஜாதா
7.   திரைக்கதை எழுதுவது எப்படி – சுஜாதா
8.   காலம் – ஒர் வரலாற்றுச் சுருக்கம்
9.   வானியல் – கோவிந்தராஜன், முத்துசாமி
10. சிந்தனையாளர்கள் வரிசை – பெஞ்சமின் பிராங்கிளின்
11. சிந்தனையாளர்கள் வரிசை – அரிஸ்டாடில்
12. சிந்தனையாளர்கள் வரிசை – சார்லஸ் டார்வின்
13. சிந்தனையாளர்கள் வரிசை – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
14. குவாண்டம் விசையியலின் துவக்கப்படிகள் – வி.ரைட்னிக் –
(தமிழில்) கமலக்கண்ணன்
15. சார்பியலும், குவாண்டம் விசையியலும் – முனைவர். பிச்சை
16. கண்டுப்பிடித்தது எப்படி? – 1 – விகடன் பிரசுரம்
17. கண்டுப்பிடித்தது எப்படி? – 2 - விகடன் பிரசுரம்
18. நோபல் வெற்றியாளர்கள் – 1 - விகடன் பிரசுரம்
19. நோபல் வெற்றியாளர்கள் – 2 - விகடன் பிரசுரம்
20. இயற்பியல் உலகம் – முனைவர். தினேஷ் சந்திர கோஸ்சாமி
21. பிரபஞ்சமும் ஐன்ஸ்டீனும் – லிங்கன் பார்னெட்
22. கலீலியோ – அறிவியலில் ஒரு புரட்சி – பேரா. முருகன்
23. ஐசக் நியூட்டன் – சி.எஸ். வெங்கடேஸ்வரன்
24. சென்னை – மறுகண்டுப்பிடிப்பு – முத்தையா
25. பிரபஞ்சம் ஒரு புதிர் – கே.என்.ராமச்சந்திரன்
26. ஜென் தத்துவக் கதைகள் - - குருஜி வாசுதேவ்
27. கலீலியோ – நடராஜன்
28. விந்தை மிகு பேரண்டம் – டாக்டர்.ப.ஐயம் பெருமாள், ஆர்.சாமுவேல் செல்வராஜ்
29. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
30. புதுமைப்பித்தன் மொழிப்பெயர்த்த உலகச் சிறுகதைகள்
31. கிரீஸ் வாழ்ந்த வரலாறு – உ.வெ.சுவாமிநாத சர்மா
32. இயற்பியலின் தாவோ – ஃபிரிட்ஜோஃப் காப்ரா - தமிழில் - பொன். சின்னதம்பி முருகேசன்
33. அறிவியல் சார்ந்த மெய்ப்பொருலின் தோற்றம் – ஹான்ஸ் ரிச்சன்பாக் – தமிழில் – சி.ராமலிங்கம்
34. சுராவின் நினைவலைகள்
35. Flatland – Edwin A.Abbott
36. Elegant Universe – Brain Green
37. Mystery of the Invisible thief
38. Oliver Twist
39. Five Point Someone – Chetan Bhagat
40. One night @ call centre - Chetan Bhagat
41. 3 mistakes in my life - Chetan Bhagat
42. 2 states - Chetan Bhagat
43. Tuesdays with Morrie - Mitch Albom
44. Surely You're Joking Mr. Feynman - Richard Feynman
45. E_mc2 A Biography of the World’s Most Famous Equation   
46. Alice adventures in Wonderland
47. Plotinsky-Reading-Bohr
48. Beyond-Einstein
49. A Short History of Nearly Everything
50. The Metaphysical Significance of Pi
51. Jostien Gaarder - Sophie's World

இப்போது நான் மேற்சொன்னதுப்படி நாம் நேரடியாக பிரச்சனைக்கு வருவோம்.

     இவ்வளவு புத்தகத்தை படித்து முடித்துவிட்டதால் (சில புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பதால்) இந்த புத்தகங்கள் மூலம் நான் தெரிந்துக் கொண்ட ஒரு முக்கிய விஷயம் நான் இன்னும் பல விஷயங்கள் தெரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறேன் என்பதே. ஆனால் அதுவே இதில் நல்ல விஷயமும் கூட. இனிமேல் நான் அதை தெரிந்துக் கொள்ளும் வாய்பையும் அது தான் கொடுத்துள்ளது.

     ஆனால் நான் இதில் பிரச்சனையாக உணர்ந்தது சமீபத்தில் நடந்தது. நான் மேற்கூறிய புத்தகங்களை கடந்த ஆண்டு படித்தேன். ஆனால் அந்த 50 புத்தகங்கள் இன்னும் 500 புத்தகங்கள் படிக்க என் ஆவலைத் தூண்டியுள்ளது. நான் அந்த 500 புத்தகங்களை படித்தால் அது மேலும் புத்தகங்களைப் படிக்கத்தூண்டும் என்பதில் உங்களுக்கும் ஐயம் இருக்காது. ஆக நான் எப்போது தான் படித்து முடிப்பேன் என்று எண்ணும் போது மிச்சுவது கவலை மட்டுமே. புத்தகம் படிப்பது என்பது ஒரு முடிவில்லாத பயணம் போல. ஏனெனில் இந்த உலகில் எதையுமே முழுவதுமாகத் தெரிந்துக் கொள்ள முடியாது தான். உதாரணத்திற்கு ”வானியல்” என்ற தலைப்பை எடுத்துக் கொண்டால் அந்த ஒரு தலைப்பை பற்றி கூட முழுவதுமாக யாராலும் தெரிந்துக் கொள்ள முடியாது என்று தான் தோன்றுகிறது. ஏன் வானியல்? ”சமையல்” ”வரலாறு” என்று எந்த தலைப்பை எடுத்து இப்படி யோசித்துப் பார்த்தாலும், எதை பற்றியும் யாருமே முழுவதுமாக அறிந்து இருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். எதோ ஒரே ஒரு தலைப்பைப் பற்றியே முழுவதுமாக தெரியாத, தெரிந்துக் கொள்ள முடியாத போது பல விஷயங்களைப் பற்றி படித்து தெரிந்துக் கொள்வது என்பது முடியாத காரியம் தான். ஆனால் நான் இதில் சிறப்பு எனக் கருதுவது நான் பல விஷயங்களை தெரிந்துக் கொள்ள முயற்சித்தும், அதற்காக பயணப்பட்டும் இருக்கிறேன் என்பதே.

    எனக்கு என் மனதில் சில சந்தேகங்கள் எழுகின்றன. அதற்காக நான் சில புத்தகங்களைப் படித்து அச்சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறேன் அல்லது நிவர்த்தி செய்ய முயர்சிக்கிறேன். நான் படிக்கும் புத்தகம் அச்சந்தேகங்களை போக்குகிறது. ஆனால் அது வேறு சில சந்தேகங்களை தருகிறது. அதற்காக நான் வேறு சில புத்தகங்களை படிக்க வேண்டியது அவசியமாகிறது. இப்படியாக ஒரு வருடம் கழித்து என்னை நானே பார்க்கும் போது முன்னை விட அதிகமாக அறிந்திருக்கிறேன். அதிகமாக சந்தேகங்களூக்கு பதில் கண்டுபிடித்து இருக்கிறேன். அதிகமாக சந்தேகங்களை எழுப்புகிறேன். இன்னும் அதிகமாக படிக்கிறேன். இங்கு நான் கவலையாகக் கொள்வது நான் இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதே. அது மிகவும் மலைப்பாக இருக்கிறது. ஆனால் இமயமலையே ஏறவேண்டும் என்றாலும் முதல் அடியை எடுத்து வைத்தால் தானே முடியும். உலகின் தலைசிறந்த விஞ்ஞானி ஐசக் நியூட்டன் சொன்னார் “உலகின் கண்களுக்கு நான் எப்படித் தெரிவேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். வழக்கத்தைவிட வழுவழுப்பாக இருக்கும் கூழங்கற்களையோ அல்லது அழகாக இருக்கும் கிளிஞ்சல்களையோ  கண்டால் என் கவனம் அவற்றின் மேது திரும்பும். அதே நேரத்தில் எல்லா உண்மைகளையும் தன்னகத்தே மறைத்துக் கொண்டு மாபெரும் கடல் என் முன்னே விரிந்து கிடக்கிறது.”

     அதேப் போன்ற கடலைப் பார்த்து தான் நான் மலைக்கிறேன். ஆனால் நான் விடா முயற்சியுடன் சிறிது சிறிதாக அதனை அறிந்துக்கொண்டு இருக்கிறேன். அதையே இந்த ஆண்டும் தொடர்கிறேன்.       

                                               வினோத் குமார்    

Tuesday, January 11, 2011

அறிவியலாளர்கள் மீது ஏன் பழி போடுறீங்க?

    கடந்த மாதத்தில் ஒருநாள் மாலை, சென்னை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நினைகிறேன். மழை வேறு கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தது. மாலை 4.00 மணியே மாலை 7.00 மணிப்போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது. எங்குமே வெளிச்சம் இல்லாததால் ஆபிசில் வேலை செய்யாமல் அமர்ந்திருந்தேன். ஜன்னலின் பக்கத்தில் அமர்ந்து “The Rise of Scientific Philosophy” by Honrs Richenburg படித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் எதையோப் பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர். நிச்சயமாக என்னைப் ற்றி இல்லை. அதனால் நான் அதனை கவனிக்கவில்லை. இருட்டில் உற்று உற்றுப் பார்த்து கொண்டிருந்தேன். காலத்தைப் பற்றி லாப்லாஸ் எண்ணியதைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். உண்மையை சொல்லப் போனால் இரு வரிகள் படித்துவிட்டு அனைப் பற்றி அழமாக யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் அதில் என்ன சொன்னார் என்பதை பற்றி பிறகு சொல்கிறேன்.

     அதற்குள் மின்சாரம் வந்துவிட அனைவரும் அவரவர் இருக்கைக்கு வந்தோம். என்னோடு பணிபுரியும் நண்பர் “நல்லவேளை கரண்ட் வந்துடுச்சி. கரண்ட் இல்லாமல் ரொம்ப கஷ்டமாப் போச்சு என்றார் என்னிடம்.   ஆமா. ரொம்ப கஷ்டமா தான் போச்சுஎன்றேன். (என்னால் படிக்க முடியவில்லையே. கஷ்டமா தான் போச்சு.) அப்படினா கரண்ட் கண்டு பிடிக்கும் முன் மக்கள் எவ்வவு கஷ்டப்பட்டிருபார்கள்என்றார். “இல்லை கஷ்டமே பட்டிருக்கமாட்டார்கள். உலகில் ரண்டே கண்டுபிடிக்காதபோது அது இல்லையே என்று எவ்வாறு வருத்தப்படுவார்கள் என்று கூறினேன். அவர் புரியாததைப் போல் முகத்தை சுளித்தைப் பார்த்துவிட்டு “சார். உலகத்தில் இனிப்பே கண்டுப்பிடிக்கவில்லை எனில் யாராவது இனிப்பைப் பற்றி பேசமுடியுமா?என்றேன். “முடியாதுஎன்றார். “அது மாதிரித் தான்என்றேன். இடத்தை விட்டு நகர்ந்துவிடடார். அவருக்கு புரிந்ததா? புரியவில்லையா? என்று எனக்கு தெரியாது.

     அடுத்து வந்த இன்னொரு நண்பர் நல்லவேளை கரண்ட் வந்துடுச்சில என்றார். நான் உடனே “பெஞசமின் ஃபிராங்க்ளின், மைக்கல் பாரடே மற்றும் தாமஷ் ஆல்வா எடிசனுக்கு நன்றி சொல்லுங்கள்“ என்று கூறினேன். “ஆம். கண்டிப்பாகஎன்றுக் கூறியவர் சற்று யோசித்துவிட்டு “அதெல்லாம் கூறமுடியாது. அவர்களால் தான் பிரச்சனையேஎன்றார். என்ன பிரச்சனை?என்றேன். “கரண்ட் நம் வாழ்வில் முக்கியமானதாக ஆகிவிட்டதற்கு காரணம் அவர்கள் தான்” என்றார். மேலும் “நாம் கரண்ட் இல்லாமல் வாழமுடியால் போய்விட்டது. அவர்கள் மட்டும் கரண்டையும், பல்பையும் கண்டுப்பிடிக்காவிட்டால் நமக்கு இந்த நிலைமை இருந்திருக்காது. நாம் ரொம்ப டிபண்டண்ட் ஆகிவிட்டோம், கொன்ச நேரம் கரண்ட் இல்லாததற்கே ரொம்ப கஷ்ட்டப்பட்டு விட்டோம்என்றார். நான் ஒன்றும் கூறவில்லை. மெல்லியதாக சிரித்துவிட்டு விட்டு விட்டேன்.

     நம்மில் பலர் அவ்வாறு தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை நாம் நினைப்பது போல் கிடையாது. ஆனால்  பெஞசமின் ஃபிராங்க்ளினோ, மைக்கல் பாரடேவோ அல்லது தாமஷ் ஆல்வா எடிசனோ, நாம் நம் வாழ்வில் கரண்ட்- க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றோ, கரண்டும், பல்பும் நம் வாழ்வில் இன்றியமையாதவையாக இருக்கும் என்றோ நினைதுக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அப்படியிருக்கும் போது நாம் கரண்ட் இன்றி வாழமுடியாது என்பதற்கு அவைகள் எப்படி காரணமாவார்கள். சொல்லுங்கள். அதனைப் பற்றி சிந்திக்கும்போது பொதுவாகவே நாம் அவ்வாறு வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ‘முள்ளு காலில் குத்திவிட்டதுஎன்கிறோம். ஆனால் உண்மை என்ன? முள்ளா நம் காலைத் தேடிப்பார்த்து வந்து குத்துகிறது? நாம் தானே முள்ளை நம் காலில் குத்திக்கொள்கிறோம். ஆனால் நாம் தமிழில் குறிப்பிடுபோது அதனை மாற்றி முள்ளின் மீது பழி சுமத்துகிறோம். ஆனால் நீங்கள் வாதிடலாம், தமிழில் மட்டும் தானே இப்படி. மற்ற மொழிகளில் இப்படி இல்லையே என்று. உண்மைதான். உதாரணமாக அங்கிலத்தில் “I pricked a thorn”. ஆனால் நான் கூறுவது மொழியைப் பற்றி அல்ல. அதனைப் பேசும் மனிதர்களைப் பற்றி. ஒரு சில மொழிகளில் பழியை அவர்களே ஏற்றுக்கொள்வதாக அம்மொழி வாக்கியங்கள் அமைந்தாலும், நாம் பொதுவாகவே தவறிழைக்காதவர்களாகவே நம்மை கருதிக்கொள்கிறோம். [அது உயிருள்ள அல்லது உயிரற்ற எதுவாக இருந்தாலும்]. ஆனால் இது தவறு என்றே நான் கருதுகிறேன்.

     உண்மையில் தாமஷ் ஆல்வா எடிசன் பல்பினைக் கண்டுப்பிடித்து அதனை மின்சாரம் மூலம் எரிய வைத்துக் காட்டி, அதனை அரசிடம் கூறி அதன நாடு முழுவதும் உபயோகிக்கலாம் என்றும் அதன் என்மை தீமைகள் பற்றியும் கூறினார். அதற்காக அந்த அமைச்சரவை ஒரு குழு அமைத்து மின்சார பல்பின் அத்தியாவசியத்தை பற்றி விசாரிக்க உத்தரவிட்டது. ”ஐயோ இது மிகவும் முக்கியமானது. எது இல்லாமல் இனி மனிதர்கள் வாழ இயலாது” என்று அவர்கள் பரிந்துரைத்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் வானில் இருந்து தாமஷ் ஆல்வா எடிசன் தன் தலையில் அடிதுக்கொண்டு சிரிப்பார். கண்டிப்பாக கோவித்தும் கொள்வார். அப்படி அந்தக் குழு என்ன தான் பரிந்துரை செய்தார்கள் என்றால் ”இந்த மின்சார பல்பினால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. வேண்டுமானல் ஆப்பிரிக்கா போன்ற வளராத நாடுகளில் வேண்டுமானால் இது உபயோகப்படலாமே தவிர நமக்கு இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை” என்பதே அது. அதேப்போல் மைக்கல் பாரடே ராயல் சொசைட்டியில் பட்ட அவமானங்களும், பெஞ்சமின் பிராங்கிலின் பட்டுத் துணியினால் செய்த காற்றடியை பறக்க வைத்ததும், அதற்காக் அவர் பட்ட கஷ்டங்களும் சொல்லிமாலாது.

     ஆகவே அவர்கள் சிரமப்பட்டது எல்லாம் அதை கண்டுப்பிடிப்பதற்கே தவிர, அது நம் வாழ்வில் மிகவும் முக்கிய அங்கம் பெறும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். நாம் செய்த பிழைக்கு அடுத்தவரை காரணம் கூறுவதை முதலில் நிருத்துவோம். அதை நிருத்தவில்லை எனில் அது ஒரு சாபக்கேடு. அதனை இந்த புத்தாண்டு முதல் நிருத்தினால் உங்களுக்கு சொர்கத்தில் நிரத்தர இடமும், ரேஷனில் வரிசையில் நிற்காமலேயெ மண்ணெண்னையும், தமிழ்நாட்டிற்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், உங்கள் வீட்டிற்கு மட்டும் மின்சாரம் துண்டிக்கப் படாமலும் நிச்சயம் இருக்கும்.   

எனவே அறிவியலாளர்கள் மீது ஏன் பழி போடாதீங்க பிளீஸ்……

                                          வினோத் குமார்

Friday, January 7, 2011

மன்னிக்க வேண்டுகிறேன்

     சில நாட்களாகவே நான் இந்த பதிவேட்டில் எந்த பதிவும் செய்யவில்லை. நான் எந்த பதிவாவது செய்திருக்கிறேனா என்று பார்த்துக் கொண்டிருந்த வாசகர்களுக்கு மிக்க நன்றி. என்னை திட்டியவர்கள் என்னை மன்னியுங்கள்.
     சிலருக்கு விஷயம் தெரிந்திருக்கும் (orkut மற்றும் facebookல் பதிவுசெய்திருந்தேன்). கடந்த ஒரு மாதத்தில் என்னுடைய பெரியப்பா, பெரியம்மா (என் அம்மாவின் அக்கா) மற்றும் இன்னொரு பெரியப்பா என மூவரும் இறந்துவிட்டார்கள். முன் இருவருக்கு புற்றுநோய். மூன்றாமவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அதனால் நான் ரொம்ப பிஸியாக இருந்தேன் என்று கூறமாட்டேன். ஆனால் என் பெரியம்மா துடிதுடித்ததைப் பார்த்தப் பின் எனக்கு எழுதுவதற்கான எண்ணமே வரவில்லை. மேலும் சில தவிர்க்க முடியாத வேலைகள் மற்றும் மரணத்திற்குப்பின் செய்யவேண்டிய காரியங்கள் என இருந்ததால் என்னால் எழுத்துப் பக்கமே வர இயலவில்லை. நானும் முயற்சிகவில்லை. அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். ஆனால் அதனை ஒரு சிறுகதையாக ’மரணம்’  என்ற தலைப்பில் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.
     ஆங்கிலத்தில் “THE OLD MAN AND THE SEA” என்ற புத்தகம் உள்ளது. HEMINGWAY என்பவர் எழுதியது. அதனை தமிழில் கூட மொழிப்பெயர்த்தார்கள் “கடலும் கிழவனும்” என்று. படித்துப்பாருங்கள். சிறியப் புத்தகம். நன்றாக இருக்கும். அதில் ஒரு வரி “மனிதனை வீழ்த்திவிடலாம் ஆனால் ஆத்மாவை அழிக்கமுடியாது.” உண்மை தானா?
எனக்கு பதில் எழுதுங்கள். ஆத்மாவை அழிக்க முடியுமா இல்லையா என்று. முதலில் ஆத்மா என்று ஒன்று இருகிறதா? “ஏன் இல்லை சுஜாதாவில் விஞ்ஞான சிறுகதைகளில் வரும் கதாப்பாத்திரம் என்று கலாய்காதீர்கள். என்னுடைய கருத்து என்ன என்று கேட்டால் நிச்சயம் பிறகு சொல்கிறேன்.
     ஐயோ சொல்ல மறந்துவிட்டேனே. அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் எனக்காக ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய பதிவேட்டினை பற்றி உங்கள் நண்பர்களிடமும் கூற. அப்படி செய்தால் நீங்கள் சொர்கத்தில் பஜனை பாடல்கள் மற்றும் தியானத்தில் இருந்து தப்பி அதன் பலனை மட்டும் முழுவதும் பெறமுடியும்.