தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Monday, January 17, 2011

2010-ல் நான் படித்த புத்தகங்கள்

புத்தாண்டு பிறந்துவிட்டது. எனவே கடந்த ஆண்டை கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன். இதில் நான் கடந்த ஆண்டு வாங்கிப் படித்த மற்றும் நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்த புத்தகங்களை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். நான் எவ்வளவு புத்தகங்கள் படித்து இருக்கிறேன் பார்த்தீர்களா? என்று பெருமைப் பட்டுக் கொள்ள இதனைக் கூறவில்லை. நான் இதைப் பதிவு செய்வதில் வேறு ஒரு காரணம் இருக்கிறது. அதனைக் கடைசியில் கூறுகிறேன். கடந்த வருடம் நான் வாங்கிய, படித்த, படித்துக் கொண்டிருக்கிற புத்தகங்கள் கீழ்வருமாறு

1.   விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா
2.   கடவுள் – சுஜாதா
3.   சுஜாதாவின் சிறுகதைகள்
4.   விக்ரம் – சுஜாதா
5.   ஸ்ரீரங்கத்து தேவதைகள் – சுஜாதா
6.   ஆ - சுஜாதா
7.   திரைக்கதை எழுதுவது எப்படி – சுஜாதா
8.   காலம் – ஒர் வரலாற்றுச் சுருக்கம்
9.   வானியல் – கோவிந்தராஜன், முத்துசாமி
10. சிந்தனையாளர்கள் வரிசை – பெஞ்சமின் பிராங்கிளின்
11. சிந்தனையாளர்கள் வரிசை – அரிஸ்டாடில்
12. சிந்தனையாளர்கள் வரிசை – சார்லஸ் டார்வின்
13. சிந்தனையாளர்கள் வரிசை – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
14. குவாண்டம் விசையியலின் துவக்கப்படிகள் – வி.ரைட்னிக் –
(தமிழில்) கமலக்கண்ணன்
15. சார்பியலும், குவாண்டம் விசையியலும் – முனைவர். பிச்சை
16. கண்டுப்பிடித்தது எப்படி? – 1 – விகடன் பிரசுரம்
17. கண்டுப்பிடித்தது எப்படி? – 2 - விகடன் பிரசுரம்
18. நோபல் வெற்றியாளர்கள் – 1 - விகடன் பிரசுரம்
19. நோபல் வெற்றியாளர்கள் – 2 - விகடன் பிரசுரம்
20. இயற்பியல் உலகம் – முனைவர். தினேஷ் சந்திர கோஸ்சாமி
21. பிரபஞ்சமும் ஐன்ஸ்டீனும் – லிங்கன் பார்னெட்
22. கலீலியோ – அறிவியலில் ஒரு புரட்சி – பேரா. முருகன்
23. ஐசக் நியூட்டன் – சி.எஸ். வெங்கடேஸ்வரன்
24. சென்னை – மறுகண்டுப்பிடிப்பு – முத்தையா
25. பிரபஞ்சம் ஒரு புதிர் – கே.என்.ராமச்சந்திரன்
26. ஜென் தத்துவக் கதைகள் - - குருஜி வாசுதேவ்
27. கலீலியோ – நடராஜன்
28. விந்தை மிகு பேரண்டம் – டாக்டர்.ப.ஐயம் பெருமாள், ஆர்.சாமுவேல் செல்வராஜ்
29. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
30. புதுமைப்பித்தன் மொழிப்பெயர்த்த உலகச் சிறுகதைகள்
31. கிரீஸ் வாழ்ந்த வரலாறு – உ.வெ.சுவாமிநாத சர்மா
32. இயற்பியலின் தாவோ – ஃபிரிட்ஜோஃப் காப்ரா - தமிழில் - பொன். சின்னதம்பி முருகேசன்
33. அறிவியல் சார்ந்த மெய்ப்பொருலின் தோற்றம் – ஹான்ஸ் ரிச்சன்பாக் – தமிழில் – சி.ராமலிங்கம்
34. சுராவின் நினைவலைகள்
35. Flatland – Edwin A.Abbott
36. Elegant Universe – Brain Green
37. Mystery of the Invisible thief
38. Oliver Twist
39. Five Point Someone – Chetan Bhagat
40. One night @ call centre - Chetan Bhagat
41. 3 mistakes in my life - Chetan Bhagat
42. 2 states - Chetan Bhagat
43. Tuesdays with Morrie - Mitch Albom
44. Surely You're Joking Mr. Feynman - Richard Feynman
45. E_mc2 A Biography of the World’s Most Famous Equation   
46. Alice adventures in Wonderland
47. Plotinsky-Reading-Bohr
48. Beyond-Einstein
49. A Short History of Nearly Everything
50. The Metaphysical Significance of Pi
51. Jostien Gaarder - Sophie's World

இப்போது நான் மேற்சொன்னதுப்படி நாம் நேரடியாக பிரச்சனைக்கு வருவோம்.

     இவ்வளவு புத்தகத்தை படித்து முடித்துவிட்டதால் (சில புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பதால்) இந்த புத்தகங்கள் மூலம் நான் தெரிந்துக் கொண்ட ஒரு முக்கிய விஷயம் நான் இன்னும் பல விஷயங்கள் தெரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறேன் என்பதே. ஆனால் அதுவே இதில் நல்ல விஷயமும் கூட. இனிமேல் நான் அதை தெரிந்துக் கொள்ளும் வாய்பையும் அது தான் கொடுத்துள்ளது.

     ஆனால் நான் இதில் பிரச்சனையாக உணர்ந்தது சமீபத்தில் நடந்தது. நான் மேற்கூறிய புத்தகங்களை கடந்த ஆண்டு படித்தேன். ஆனால் அந்த 50 புத்தகங்கள் இன்னும் 500 புத்தகங்கள் படிக்க என் ஆவலைத் தூண்டியுள்ளது. நான் அந்த 500 புத்தகங்களை படித்தால் அது மேலும் புத்தகங்களைப் படிக்கத்தூண்டும் என்பதில் உங்களுக்கும் ஐயம் இருக்காது. ஆக நான் எப்போது தான் படித்து முடிப்பேன் என்று எண்ணும் போது மிச்சுவது கவலை மட்டுமே. புத்தகம் படிப்பது என்பது ஒரு முடிவில்லாத பயணம் போல. ஏனெனில் இந்த உலகில் எதையுமே முழுவதுமாகத் தெரிந்துக் கொள்ள முடியாது தான். உதாரணத்திற்கு ”வானியல்” என்ற தலைப்பை எடுத்துக் கொண்டால் அந்த ஒரு தலைப்பை பற்றி கூட முழுவதுமாக யாராலும் தெரிந்துக் கொள்ள முடியாது என்று தான் தோன்றுகிறது. ஏன் வானியல்? ”சமையல்” ”வரலாறு” என்று எந்த தலைப்பை எடுத்து இப்படி யோசித்துப் பார்த்தாலும், எதை பற்றியும் யாருமே முழுவதுமாக அறிந்து இருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். எதோ ஒரே ஒரு தலைப்பைப் பற்றியே முழுவதுமாக தெரியாத, தெரிந்துக் கொள்ள முடியாத போது பல விஷயங்களைப் பற்றி படித்து தெரிந்துக் கொள்வது என்பது முடியாத காரியம் தான். ஆனால் நான் இதில் சிறப்பு எனக் கருதுவது நான் பல விஷயங்களை தெரிந்துக் கொள்ள முயற்சித்தும், அதற்காக பயணப்பட்டும் இருக்கிறேன் என்பதே.

    எனக்கு என் மனதில் சில சந்தேகங்கள் எழுகின்றன. அதற்காக நான் சில புத்தகங்களைப் படித்து அச்சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறேன் அல்லது நிவர்த்தி செய்ய முயர்சிக்கிறேன். நான் படிக்கும் புத்தகம் அச்சந்தேகங்களை போக்குகிறது. ஆனால் அது வேறு சில சந்தேகங்களை தருகிறது. அதற்காக நான் வேறு சில புத்தகங்களை படிக்க வேண்டியது அவசியமாகிறது. இப்படியாக ஒரு வருடம் கழித்து என்னை நானே பார்க்கும் போது முன்னை விட அதிகமாக அறிந்திருக்கிறேன். அதிகமாக சந்தேகங்களூக்கு பதில் கண்டுபிடித்து இருக்கிறேன். அதிகமாக சந்தேகங்களை எழுப்புகிறேன். இன்னும் அதிகமாக படிக்கிறேன். இங்கு நான் கவலையாகக் கொள்வது நான் இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதே. அது மிகவும் மலைப்பாக இருக்கிறது. ஆனால் இமயமலையே ஏறவேண்டும் என்றாலும் முதல் அடியை எடுத்து வைத்தால் தானே முடியும். உலகின் தலைசிறந்த விஞ்ஞானி ஐசக் நியூட்டன் சொன்னார் “உலகின் கண்களுக்கு நான் எப்படித் தெரிவேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். வழக்கத்தைவிட வழுவழுப்பாக இருக்கும் கூழங்கற்களையோ அல்லது அழகாக இருக்கும் கிளிஞ்சல்களையோ  கண்டால் என் கவனம் அவற்றின் மேது திரும்பும். அதே நேரத்தில் எல்லா உண்மைகளையும் தன்னகத்தே மறைத்துக் கொண்டு மாபெரும் கடல் என் முன்னே விரிந்து கிடக்கிறது.”

     அதேப் போன்ற கடலைப் பார்த்து தான் நான் மலைக்கிறேன். ஆனால் நான் விடா முயற்சியுடன் சிறிது சிறிதாக அதனை அறிந்துக்கொண்டு இருக்கிறேன். அதையே இந்த ஆண்டும் தொடர்கிறேன்.       

                                               வினோத் குமார்    

No comments: