சில நாட்களாகவே நான் இந்த பதிவேட்டில் எந்த பதிவும் செய்யவில்லை. நான் எந்த பதிவாவது செய்திருக்கிறேனா என்று பார்த்துக் கொண்டிருந்த வாசகர்களுக்கு மிக்க நன்றி. என்னை திட்டியவர்கள் என்னை மன்னியுங்கள்.
சிலருக்கு விஷயம் தெரிந்திருக்கும் (orkut மற்றும் facebookல் பதிவுசெய்திருந்தேன்). கடந்த ஒரு மாதத்தில் என்னுடைய பெரியப்பா, பெரியம்மா (என் அம்மாவின் அக்கா) மற்றும் இன்னொரு பெரியப்பா என மூவரும் இறந்துவிட்டார்கள். முன் இருவருக்கு புற்றுநோய். மூன்றாமவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அதனால் நான் ரொம்ப பிஸியாக இருந்தேன் என்று கூறமாட்டேன். ஆனால் என் பெரியம்மா துடிதுடித்ததைப் பார்த்தப் பின் எனக்கு எழுதுவதற்கான எண்ணமே வரவில்லை. மேலும் சில தவிர்க்க முடியாத வேலைகள் மற்றும் மரணத்திற்குப்பின் செய்யவேண்டிய காரியங்கள் என இருந்ததால் என்னால் எழுத்துப் பக்கமே வர இயலவில்லை. நானும் முயற்சிகவில்லை. அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். ஆனால் அதனை ஒரு சிறுகதையாக ’மரணம்’ என்ற தலைப்பில் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ஆங்கிலத்தில் “THE OLD MAN AND THE SEA” என்ற புத்தகம் உள்ளது. HEMINGWAY என்பவர் எழுதியது. அதனை தமிழில் கூட மொழிப்பெயர்த்தார்கள் “கடலும் கிழவனும்” என்று. படித்துப்பாருங்கள். சிறியப் புத்தகம். நன்றாக இருக்கும். அதில் ஒரு வரி “மனிதனை வீழ்த்திவிடலாம் ஆனால் ஆத்மாவை அழிக்கமுடியாது.” உண்மை தானா?
எனக்கு பதில் எழுதுங்கள். ஆத்மாவை அழிக்க முடியுமா இல்லையா என்று. முதலில் ஆத்மா என்று ஒன்று இருகிறதா? “ஏன் இல்லை சுஜாதாவில் விஞ்ஞான சிறுகதைகளில் வரும் கதாப்பாத்திரம் என்று கலாய்காதீர்கள். என்னுடைய கருத்து என்ன என்று கேட்டால் நிச்சயம் பிறகு சொல்கிறேன்.
ஐயோ சொல்ல மறந்துவிட்டேனே. அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் எனக்காக ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய பதிவேட்டினை பற்றி உங்கள் நண்பர்களிடமும் கூற. அப்படி செய்தால் நீங்கள் சொர்கத்தில் பஜனை பாடல்கள் மற்றும் தியானத்தில் இருந்து தப்பி அதன் பலனை மட்டும் முழுவதும் பெறமுடியும்.
No comments:
Post a Comment