கடந்த மாதத்தில் ஒருநாள் மாலை, சென்னை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நினைகிறேன். மழை வேறு கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தது. மாலை 4.00 மணியே மாலை 7.00 மணிப்போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது. எங்குமே வெளிச்சம் இல்லாததால் ஆபிசில் வேலை செய்யாமல் அமர்ந்திருந்தேன். ஜன்னலின் பக்கத்தில் அமர்ந்து “The Rise of Scientific Philosophy” by Honrs Richenburg படித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் எதையோப் பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர். நிச்சயமாக என்னைப் பற்றி இல்லை. அதனால் நான் அதனை கவனிக்கவில்லை. இருட்டில் உற்று உற்றுப் பார்த்து கொண்டிருந்தேன். காலத்தைப் பற்றி லாப்லாஸ் எண்ணியதைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். உண்மையை சொல்லப் போனால் இரு வரிகள் படித்துவிட்டு அதனைப் பற்றி அழமாக யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் அதில் என்ன சொன்னார் என்பதை பற்றி பிறகு சொல்கிறேன்.
அதற்குள் மின்சாரம் வந்துவிட அனைவரும் அவரவர் இருக்கைக்கு வந்தோம். என்னோடு பணிபுரியும் நண்பர் “நல்லவேளை கரண்ட் வந்துடுச்சி. கரண்ட் இல்லாமல் ரொம்ப கஷ்டமாப் போச்சு” என்றார் என்னிடம். ”ஆமா. ரொம்ப கஷ்டமா தான் போச்சு” என்றேன். (என்னால் படிக்க முடியவில்லையே. கஷ்டமா தான் போச்சு.) ”அப்படினா கரண்ட் கண்டு பிடிக்கும் முன் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருபார்கள்” என்றார். “இல்லை கஷ்டமே பட்டிருக்கமாட்டார்கள். உலகில் கரண்டே கண்டுபிடிக்காதபோது அது இல்லையே என்று எவ்வாறு வருத்தப்படுவார்கள்” என்று கூறினேன். அவர் புரியாததைப் போல் முகத்தை சுளித்தைப் பார்த்துவிட்டு “சார். உலகத்தில் இனிப்பே கண்டுப்பிடிக்கவில்லை எனில் யாராவது இனிப்பைப் பற்றி பேசமுடியுமா?” என்றேன். “முடியாது” என்றார். “அது மாதிரித் தான்” என்றேன். இடத்தை விட்டு நகர்ந்துவிடடார். அவருக்கு புரிந்ததா? புரியவில்லையா? என்று எனக்கு தெரியாது.
அடுத்து வந்த இன்னொரு நண்பர் ”நல்லவேளை கரண்ட் வந்துடுச்சில” என்றார். நான் உடனே “பெஞசமின் ஃபிராங்க்ளின், மைக்கல் பாரடே மற்றும் தாமஷ் ஆல்வா எடிசனுக்கு நன்றி சொல்லுங்கள்“ என்று கூறினேன். “ஆம். கண்டிப்பாக” என்றுக் கூறியவர் சற்று யோசித்துவிட்டு “அதெல்லாம் கூறமுடியாது. அவர்களால் தான் பிரச்சனையே” என்றார். ”என்ன பிரச்சனை?” என்றேன். “கரண்ட் நம் வாழ்வில் முக்கியமானதாக ஆகிவிட்டதற்கு காரணம் அவர்கள் தான்” என்றார். மேலும் “நாம் கரண்ட் இல்லாமல் வாழமுடியால் போய்விட்டது. அவர்கள் மட்டும் கரண்டையும், பல்பையும் கண்டுப்பிடிக்காவிட்டால் நமக்கு இந்த நிலைமை இருந்திருக்காது. நாம் ரொம்ப டிபண்டண்ட் ஆகிவிட்டோம், கொன்ச நேரம் கரண்ட் இல்லாததற்கே ரொம்ப கஷ்ட்டப்பட்டு விட்டோம்” என்றார். நான் ஒன்றும் கூறவில்லை. மெல்லியதாக சிரித்துவிட்டு விட்டு விட்டேன்.
நம்மில் பலர் அவ்வாறு தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை நாம் நினைப்பது போல் கிடையாது. ஆனால் பெஞசமின் ஃபிராங்க்ளினோ, மைக்கல் பாரடேவோ அல்லது தாமஷ் ஆல்வா எடிசனோ, நாம் நம் வாழ்வில் கரண்ட்- க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றோ, கரண்டும், பல்பும் நம் வாழ்வில் இன்றியமையாதவையாக இருக்கும் என்றோ நினைதுக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அப்படியிருக்கும் போது நாம் கரண்ட் இன்றி வாழமுடியாது என்பதற்கு அவைகள் எப்படி காரணமாவார்கள். சொல்லுங்கள். அதனைப் பற்றி சிந்திக்கும்போது பொதுவாகவே நாம் அவ்வாறு வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ‘முள்ளு காலில் குத்திவிட்டது’ என்கிறோம். ஆனால் உண்மை என்ன? முள்ளா நம் காலைத் தேடிப்பார்த்து வந்து குத்துகிறது? நாம் தானே முள்ளை நம் காலில் குத்திக்கொள்கிறோம். ஆனால் நாம் தமிழில் குறிப்பிடுபோது அதனை மாற்றி முள்ளின் மீது பழி சுமத்துகிறோம். ஆனால் நீங்கள் வாதிடலாம், தமிழில் மட்டும் தானே இப்படி. மற்ற மொழிகளில் இப்படி இல்லையே என்று. உண்மைதான். உதாரணமாக அங்கிலத்தில் “I pricked a thorn”. ஆனால் நான் கூறுவது மொழியைப் பற்றி அல்ல. அதனைப் பேசும் மனிதர்களைப் பற்றி. ஒரு சில மொழிகளில் பழியை அவர்களே ஏற்றுக்கொள்வதாக அம்மொழி வாக்கியங்கள் அமைந்தாலும், நாம் பொதுவாகவே தவறிழைக்காதவர்களாகவே நம்மை கருதிக்கொள்கிறோம். [அது உயிருள்ள அல்லது உயிரற்ற எதுவாக இருந்தாலும்]. ஆனால் இது தவறு என்றே நான் கருதுகிறேன்.
உண்மையில் தாமஷ் ஆல்வா எடிசன் பல்பினைக் கண்டுப்பிடித்து அதனை மின்சாரம் மூலம் எரிய வைத்துக் காட்டி, அதனை அரசிடம் கூறி அதன நாடு முழுவதும் உபயோகிக்கலாம் என்றும் அதன் என்மை தீமைகள் பற்றியும் கூறினார். அதற்காக அந்த அமைச்சரவை ஒரு குழு அமைத்து மின்சார பல்பின் அத்தியாவசியத்தை பற்றி விசாரிக்க உத்தரவிட்டது. ”ஐயோ இது மிகவும் முக்கியமானது. எது இல்லாமல் இனி மனிதர்கள் வாழ இயலாது” என்று அவர்கள் பரிந்துரைத்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் வானில் இருந்து தாமஷ் ஆல்வா எடிசன் தன் தலையில் அடிதுக்கொண்டு சிரிப்பார். கண்டிப்பாக கோவித்தும் கொள்வார். அப்படி அந்தக் குழு என்ன தான் பரிந்துரை செய்தார்கள் என்றால் ”இந்த மின்சார பல்பினால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. வேண்டுமானல் ஆப்பிரிக்கா போன்ற வளராத நாடுகளில் வேண்டுமானால் இது உபயோகப்படலாமே தவிர நமக்கு இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை” என்பதே அது. அதேப்போல் மைக்கல் பாரடே ராயல் சொசைட்டியில் பட்ட அவமானங்களும், பெஞ்சமின் பிராங்கிலின் பட்டுத் துணியினால் செய்த காற்றடியை பறக்க வைத்ததும், அதற்காக் அவர் பட்ட கஷ்டங்களும் சொல்லிமாலாது.
ஆகவே அவர்கள் சிரமப்பட்டது எல்லாம் அதை கண்டுப்பிடிப்பதற்கே தவிர, அது நம் வாழ்வில் மிகவும் முக்கிய அங்கம் பெறும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். நாம் செய்த பிழைக்கு அடுத்தவரை காரணம் கூறுவதை முதலில் நிருத்துவோம். அதை நிருத்தவில்லை எனில் அது ஒரு சாபக்கேடு. அதனை இந்த புத்தாண்டு முதல் நிருத்தினால் உங்களுக்கு சொர்கத்தில் நிரத்தர இடமும், ரேஷனில் வரிசையில் நிற்காமலேயெ மண்ணெண்னையும், தமிழ்நாட்டிற்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், உங்கள் வீட்டிற்கு மட்டும் மின்சாரம் துண்டிக்கப் படாமலும் நிச்சயம் இருக்கும்.
எனவே அறிவியலாளர்கள் மீது ஏன் பழி போடாதீங்க பிளீஸ்……
வினோத் குமார்
No comments:
Post a Comment