தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Saturday, March 26, 2011

கார்ல் சாகன்


தமிழினி – வசந்த குமார்

     தமிழ் பத்திரிக்கைகளை பொதுவாக இரண்டாக பிரிக்கலாம்.  1. அடுத்தவர் காசில் ஆப்பிள் ஜுஸ் குடிக்கும் சினிமா நடிகர், நடிகைகளைப் பற்றியும், தமிழ் சினிமா தான் உலகிலேயே சிறந்தது என்று வாதிட்டு அரைத்த மாவையே அரைப்பது. 2. “நீ வானம் நான் பூமி’, “அது நிலா, நீ பலா” என கிறுக்கித்தள்ளும் (எல்லா பத்திரிக்கைகளும் அல்ல) பத்திரிக்கைகள். இரண்டிலும் பொதுவாக சில வேண்டாத அரசியல் செய்திகள். அனைத்துப் பத்திரிக்கைகளும் இந்த இரண்டு பிரிவுகளில் வந்துவிடும். ஆனால் தமிழினி போன்ற சில பத்திரிக்கைகள் மட்டும் விதிவிலக்காக் உள்ளது. இதில் பிக்‌ஷனை விட நான்-பிக்‌ஷனுனுக்கு அதிக முக்கியத்துவம் தருவத்து வெளிப்படையாகவேத் தெரிகிறது. அதற்காக திரு.வசந்த குமார் அவர்களை நிச்சயம் பாரட்ட வேண்டும்.

                     **************

     பொதுவாகவே இணையதளத்தில் தேடும் வளைத்தளங்களின் ஆதிக்கம் சற்று அதிகம், முக்கியமாக இந்தியாவில். கூகுள் டாட் காம்க்கு இந்தியாவில் கொஞ்சம் அதிக மவுசு தான். ஆனால் இந்த மாதிரியான வளைத்தளங்களில் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில் நாம் எதைத் தேடுகிறோமோ, அந்த வார்த்தையை மையமாக வைத்து அந்த சர்ச் இன்ஞின் தேடுமே தவிர, அதன் அர்த்தைதை புரிந்துக் கொண்டு தேடாது. எனவே நமக்கு தேவையில்லாத பல விஷயங்களும், நேர விரயமும் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால் சமீபத்தில் நான் பார்த்த இணையதளமான “www.trueknowledge.com” -ல் நாம் கொடுக்கும் வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துக்கொண்டு அதற்கான பதிலை திரையில் காண்பிக்கும். இதனால் தேவையில்லாத பதிலைத் தவிர்ப்பதுடன், நேர விரயத்தையும் கனிசமாகக் குறைக்கும். ஆனால் இதில் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலில்லாதது சற்று வருத்தம் தானெனினும் “ஒரு குழந்தை பிறந்தவுடன் யாருக்கென்ன உபயோகம் என்று?” என்று மைக்கல் பாரடே கேட்டதுப் போல இந்த இணையதளமும் நாளடைவில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் என நம்புகிறேன்.
  
*****
     என்னுடைய ஆருயிர் நண்பன் சர்வேஷ்க்கு ஸ்வீடன் நாட்டில் அஸ்ரோ-பிஸிக்சில் முதுகலை பட்டம் படிக்க வாய்ப்பு கிட்டி்யுள்ளது. அது சமீபத்தில் எனக்கு கிடைத்த மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாகும். எனக்கென்னவோ, எனக்கே வாய்ப்பு கிடைத்தது போன்ற எண்ணத்தை இது ஏற்படுத்தி உள்ளது. இந்த வாய்ப்பு அவனுக்கு கிடைத்ததற்கு அவனுடைய கடின உழைப்பும், விடாமுயற்ச்சியும் காரணம். சர்வேஷ் மாதிரி பலர் வெளிநாடு சென்று படிப்பதற்காண காரணத்தை அலசிப்பார்த்தால், அந்தத் துறையில் இந்தியாவில் மிகச்சில கல்லூரிகளே உள்ளன. எனவே அவன் வெளிநாட்டில் முயற்சி செய்து தோற்று, வறுந்தி தற்போது வெற்றியும் பெற்றுவிட்டான். அவனைப் போன்ற சிறந்த் மாணவனை இந்தியா இழந்து விட்டது என்றுதான் கூறத் தோன்றுகிறது. எனினும் இத்துறை அல்லாதவர்கள் ஏன் வெளிநாடு சென்று படிக்கிறார்கள் என்று எனக்கு முழுதாக தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு விஷயத்தில் ஐயமேயில்லை. இந்தியாவின் பெயரை உயர்த்த இதோ ஒரு விஞ்ஞானி வறுகிறான், உருவாகிறான். ஆனால் உருவாக்கப்படுவது ஸ்வீடனில். வாழ்த்துக்கள் சர்வேஷ்.
*********
சமீபத்தில் சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்களில் கார்ல் சாகன் பற்றிய அர்ப்புதமானக் கட்டுரையைப் படித்தேன். அதில் கார்ல் சாகனின் “The Fine Art of Baloney Detection” எழுதியிருந்தார். உடனே அந்த அத்தியாயத்தை தேடிப் பிடித்து படித்தேன். அறிவியல் முறை என்பது என்ன? அறிவியல் பூர்வமான சிந்தனைகளிலிருந்து மூட பழக்கவழக்க சிந்தனைகளை பகுத்தறியும் முறைகளையும், கேள்விக் கேட்காமல் எதையும் ஏற்க்க வேண்டாம் என்பதற்கு கார்ல் சாகன் கொடுத்துள்ள வழிமுறைகள் என்னை சிந்திக்க வைத்தது.

     வேற்று கிரகவாசிகளை நேரில் பார்த்தேன் என்று கூறுவதிலிருந்து சாமியார் வாயில் லிங்கம் எடுப்பது, எனக்கு இது முன்கூட்டியேத் தெரியும் என புருடா விடுபவர்கள் என அனைத்தையும் இவ்வழிமுறைகளில் ஆராயமுடியும்.

1.             ”உண்மை”, “பிரத்தியட்சம்” என்பதையெல்லாம் அவரவர் சொந்தமாக உறுதி செய்யவும்.

ஒரு ஆள் தண்ணீரில் நடக்கிறார் என்று யாராவது உங்களிடம் கூறினால், நீங்கள் நேரில் பார்க்கும் வரை அதை ஆராய்ச்சிக்கு ஏற்காதீர்கள்.

2.             நீங்கள் அல்லது மற்றவர்கள் “உண்மை” என்று ஏதெனும் கூறினால், அதற்கு மாற்றுக் கருத்துகளையும் விவாதங்களையும் ஊக்குவிப்பது அவசியம்.

3.             அதிகாரம், அரசாங்கம் போன்ற “பெரிய கைகள்” சொல்கிறது என்பதால் ஒன்றை ஒப்புக் கொள்ளக்கூடாது. அறிவியலில் “பெரிய கைகள்” இல்லை. நிபுணர்கள் மட்டுமே உள்ளனர்.

4.             ஒரு விஷயத்தை பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு விளைவை விளக்க வேண்டுமெனில் வெவ்வேறு முறைகளீ அதை விளக்க முற்பட வேண்டும். அப்படிச் செய்த ஒவ்வொரு விளக்கத்தையும் உண்மையில்லை, சரிப்படாது, பொருந்தாது என்றும் நிரூபிக்க முயல வேண்டும்.

5.             ஏதாவது ஒரு விளக்கத்துடன் பாசம் கொள்ளக் கூடாது. அது உங்கள் விளக்கம் என்பதற்காக அதற்கு சலுகைக் காட்டக்கூடாது. மற்ர விளக்கங்களுடன் நியாயமாக ஒப்பிட்டு உங்கள் வி்ளக்கத்தை நிராகரிக்க காரணங்களை கண்டுப்பிடிக்க முடியுமா என்று பாருங்கள். நீங்கள் கண்டுப்பிடிக்கவில்லையென்றால் மற்றவர்கள் கண்டுப்பிடிப்பார்கள்.     

6.             எதையும் அளந்து சொல்ல முயற்சிக்க வேண்டும். மனத்திற்கு மனம் “டெலிபத்தி” மூலம் தொடர்பு கொள்ள முடியும் என்று ஒருவர் சொன்னால் அவரிடம் அது என்ன அலைநீளம் அல்லது துடிப்பெண், அது ந்த்தை மைக்ரோ வோலட் என்று கேட்பது அறிவியலின்படி நியாயமானது.

7.             “இதனால் இது” என்று சங்கிலி போல் விளைவுகளைச் சொல்லி கடைசியில் ஒரு சங்கதி சொன்னால் அந்த சங்கிலித் தொடரின் ஒவ்வொரு கணையையும் தனிப்பட்டுப் பரிசோதிக்க வேண்டும்.

8.             “ஒக்காம்மின் கத்தி” என்கிற முறைப்படி ஒரு விளைவை இரண்டு சித்தாந்தங்கள் மூலம் சமசாத்தியமாக விளக்க முடிந்தால் இரண்டில் எந்த சித்தாந்தம் எளிமையானதோ அதை ஏற்றுக்கொள்ளவும்.
 
     உதாரணமாக முருகன் படத்தில் விபூதி கொட்டுகிறது என்றால் அது தெய்வச் செயல் என்று ஒருவரும், ராத்திரியில் ஒரு பக்தர் ரகசியமாக எழுந்து போய் விபூதி வைக்கிறார் என்றும் இரண்டு விளக்கங்கள் கிடைத்து தற்சமயத்துக்கு இரண்டுமே சாத்தியம் என்று ஒரு சபையில் தீர்மானித்தால் இரண்டாவது எளிய விளக்கத்தை எடுத்துக் கொள்ளவும்.

9.             எந்த சித்தாந்தத்தையும் பொய் ந்ன்று நிரூபிக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராயவும். அது இல்லையென்றால் அதை ஏற்க முடியாது.

உதாரணமாக யாராவது ஒரு வேதாந்தி அல்லது ஒரு இயற்பியல் விஞ்ஞானி இந்த பிரபஞ்சமே ஒரே ஒரு எலக்ரானால் ஆனது, அது மற்றொரு வெளிப் பிரபஞ்சத்தின் ஒரு சிறு துகள் என்று சித்தாந்தம் கொண்டுவந்தால் அதை நம்மால் பரிசோதனை மூலம் மறுக்க இயலாது. காரணம், நம் பிரபஞ்சத்திற்கு வெளியே சென்று நம்மால் நம் பிரபஞ்சத்தைப் பார்வையிட இயலாது. அதனால் இந்த சித்தாந்தம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. உண்டு – இல்லை என்று நிரூபிக்கும் சந்தர்ப்பம் வேண்டும் என்கிறார் கார்ல் சாகன்.

     ”விவாதம் மட்டுமே புதிய செயல் வகைகளைக் கண்டுப்பிடிக்கப் போதாது. காரணம், இயற்கையின் நுட்பம் விவாதங்களின் நுட்பத்தை விட பன்மடங்கு அதிகமானது”.
                                                - கார்ல் சாகன்

                                                உங்கள் V.S