எனக்கு கவிதை படித்தோ அல்லது எழுதியோ பழக்கமில்லை. (ஹைக்கூவைத் தவிர). இருந்தாலும் இணையதளத்தில் சர்வதேச தமிழ் கவிதை போட்டிக்கான அறிவிப்பைக் கண்டதும் எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு பரிசு கிடைக்கும் என்று நிச்சயமாக எதிபார்க்கவில்லை. உண்மையில் பரிசு கிடைத்தது என்று அறிந்தவுடன் என் வீட்டில் சொல்லும் போது அவர் அனைவரும் சிரித்தனர். என்னை நம்மவில்லை. அது ஒரு புறம் இறுக்கட்டும்.
இந்தப் போட்டியை அமெரிக்காவிலிருந்து நடத்திய சரவணன் மற்றும் அருண்மணி அவர்களுக்கும் மேலும் எனது கவிதையை மூன்றாவது கவிதையாக தேர்வுசெய்த நடுவகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் அம்மா அடிக்கடி இணையதளத்திற்கு மாதாமாதம் பணம் வீணாவதாக நினைத்து கவலைப்பட்ட நேரத்தில் இப்பரிசு அவர்களை கொஞ்ச நாட்கள் அமைதி காக்க வைக்கும். ஏனெனில் பரிசாகக் கிடைத்து "Apple Ipod 8gb touch".
எனது வாழ்வின் முதல் இரு கவிதைகளையும் இத்துடன் இணைக்கிறேன். வெறும் பதினைந்து நிமிடத்தில் எழுதி, தமிழில் டைப் செய்து அனுப்பி பரிசு பெற்றது இக்கவிதைகள்.
நான் எழுதி அனுப்பிய இரு கவிதைகளில் ”வானவில்” எனும் தலைப்புக் கவிதை மூன்றாம் பரிசுப் பெற்றது. முதல் பரிசு இலங்கையில் உள்ளவருக்கும், இரண்டாம் பரிசு துபாயில் உள்ளவருக்கும் சென்றது.

வானவில்
நான் நன்றி சொல்வேன்
என் கண்களுக்கு.
உன் பல வித வண்ணங்களை
பார்க்க முடிந்ததால்.
நான் நன்றி சொல்வேன்
ஐசக் நியூட்டனுக்கு.
உன்னை முதல்முறை பகுத்தறிந்து
உண்மையை உலகிற்கு சொன்னதால்.
நான் நன்றி சொல்வேன்
அந்த மாலை வேளைக்கு.
ஏனெனில் அப்போது தான் நீ
வானில் எழுகிறாய்.
நான் நன்றி சொல்வேன்
அந்த மழைக்கு.
ஏனெனில், அது நின்ற பின்பு தான்
உன்னை வெளிவர அனுமதிக்கிறது.
நான் நன்றி சொல்வேன்
அந்த கதிரவனுக்கு.
ஏனெனில், அதன் ஒளியைத் தான்
நீ பிரதிபலிக்கிறாய்.
நான் நன்றி சொல்வேன்
என் கணக்கு ஆசிரியருக்கு.
”அரைவட்டம் என்றால் என்ன?” என்றபோது
உன்னைக் காட்டியதற்கு.
நான் நன்றி சொல்வேன்
அந்த கிழக்கு திசைக்கு.
எனெனில் உன்னை எப்போதும்
அந்த் திசையிலேயே காட்டியதற்கு.
நான் நன்றி சொல்வேன்
இறைவனுக்கு.
என்னை படைத்ததால் தான்
உன்னை பார்க்க முடிந்ததற்கு.
நான் நன்றி சொல்வேன்
இந்த கவிதைக்கு.
உன்னை வாழ்த்தி என்னால்
ஒரு கவிதை எழுத முடிந்ததற்கு.
சமாதானம்
யாருக்கும் யாருக்கும் சமாதானம்?
மனிதனுக்கும், மனிதனுக்குமா?
மனிதனாக இருந்தால் ஏன் சமாதானம்?
நாம் இன்னும் ஆகவில்லையே மனிதனாக,
அதனால் தான் சமாதானம்.
அன்பு வழியும், அறநெறியும்
இருந்தால், எதற்கு சமாதானம்
பற்றிய பேச்சுக்களும், கவிதைகளும்.
ஆயிரத்தில் ஒருவனுக்குத் தான் தெரிகிறது
அன்பு வழியும், அறநெறியும்
அதனால் தான் சமாதானம்
பற்றிய பேச்சுக்களும் கவிதைகளுமோ!
சமாதானம் என்பது கோழையின் அடையாளமா?
நிச்சயம் இல்லை. ஏனெனில்,
இயேசுவோ, புத்தரோ, காந்தியோ
கண்டிப்பாக கோழைகளில்லை.
வெள்ளைக் கொடியும், வெண் புறாவும்
சமாதான சின்னங்களாம்!
நம் மனதில் இருக்கவேண்டியது இல்லாததால்
தான் அது துணியிலும், பறவையிலும்
தோன்றியது.
யாருக்குத் தெரியும்! மனிதன்
சமாதானத்தை புறாவிற்கு என்று
எடுத்துக் கொண்டானோ என்னவோ.
உலக சமாதானம், தமிழர் பிரச்சனை சமாதானம்
பாகிஸ்தானுடன் சமாதானம் என்று
பேசிக் கொண்டே நாம்
பக்கத்து வீட்டில் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
முதலில் நம்மைச் சுற்றிய
சமாதானம் முக்கியம்.
தனிமனித ஒழுக்கமும், சமாதானமுமே
நாட்டைக் காப்பாற்றும்
ஒன்று நிச்சயம்
வெறும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு
யாராலும் சமாதானத்தை ஏற்ப்படுத்த முடியாது.
அது ஓநாய், ஆட்டிற்கு காவல்
இருப்பது போல் ஆகிவிடும்.