சென்னை புத்தக கண்காட்சி – 2012 – ல் வாங்கிய புத்தகங்கள்
சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சில நாட்கள் என்னால் இணையதளத்தில் எழுத இயலவில்லை. சில புத்தகங்களை எழுத்திக் கொண்டு இருப்பதாலும், வெள்ளியின் சூரிய கடவு (venus Transit – ஜுன் 6) காரணமாக பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாலம் கம்ப்யூட்டரில் எழுத முடியவில்லையே தவிர, தினமும் வீட்டில் எழுதிக்கொண்டு தான் இருகிறேன். இணையத்தில் வெளியிடுவதில்லை. அவ்வளவுதான்.
திடீரென்று ஒரு புத்தகத்தை வாங்க எண்ணும் போது தான் இன்னும் நான் சென்னை புத்தக கண்காட்சி – 2012 ல் வாங்கிய புத்தகங்களை பட்டியலிடவில்லை என்று நினைவிற்கு வந்தது. எனவே அந்த புத்தகங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு. (இதனால் நான் சென்ற வருடம் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டேன் என்று அர்த்தமில்லை. அதிலேயே இன்னும் மீதி படிகாமல் உள்ளது.)
பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களை இணையத்தலத்திலேயே வாங்கி விடுவதால், புத்தக கண்காட்சியில் ஆங்கில புத்தகங்கள் வாங்குவதை தவிர்த்தேன். சரி இப்போது என்ன என்ன புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன் என்று பார்ப்போம். (புத்தகங்களின் பெயர், எழுதியவர், பதிப்பகத்தின் பெயர் என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.)
மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம்
கி.மு கி.பி – மதன் - கிழக்கு பதிப்பகம்
ஸ்பெக்ட்ரம் – பத்ரி – கிழக்கு பதிப்பகம்
கிளியோப்பாட்ரா – முகில் – கிழக்கு பதிப்பகம்
பேய் – சஞ்சீவி - கிழக்கு பதிப்பகம்
நம்பகூடாத கடவுள் – அரவிந்தன் நீலகண்டன் – கிழக்கு பதிப்பகம்
கிருஸ்துவம் – ஒரு முழுமையான வரலாறு – சேவியர் – கிழக்கு பதிப்பகம்
விலங்குப் பண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் – தமிழில் பி.வி.ராமஸ்வாமி – கிழக்கு பதிப்பகம் (Translation of Animal Farm)
தத்துவங்களின் தேரோட்டம் – எஸ்.ஏ.பெருமாள் – பாரதி புத்தகாலயம்
அறிவாளியா? முட்டாளா? - த.வி.வெங்கடேஸ்வரன் - பாரதி புத்தகாலயம்
கடவுள் பிறந்த கதை – எஸ்.ஏ.பெருமாள் – பாரதி புத்தகாலயம்
கடவுள் உண்டா? இல்லையா? – ஏ.பாலசுப்ரமண்யம் - பாரதி புத்தகாலயம்
கடவுளைப் பார்த்தவரின் கதை – லியோ டால்ஸ்டாய் – தமிழில் பாலு சத்யா - பாரதி புத்தகாலயம்
பகுத்தறிவாளர் புத்தர் – தே.லட்சுமணன் - பாரதி புத்தகாலயம்
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி – ராபின் ஷர்மா – ஜெய்கோ பதிப்பகம் - Translation of The Monk who sold his Ferrari.
சோஃபியின் உலகம் – யொஸ்டைன் கார்டெர் – தமிழில் ஆர். சிவகுமார் - காலச்சுவடு பதிப்பகம் – Translation of Sophie’s World.
ஆனிஃபிராங்க் – டைரிக் குறிப்புகள் – உஷாதரன் – எதிர் வெளியீடு – Translation of Diary of Anne Frank
வாஷிங்டனில் திருமணம் – சாவி – நர்மதா பதிப்பகம்
நேர் நேர் தேமா – கோபிநாத் – சிக்த்சென்ஸ்
நண்பன் – சிறுகதைகள் - சிக்த்சென்ஸ்
நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது – கிருஷ்ணகாந்த் - சிக்த்சென்ஸ்
அறிவியல் புனைகதைகள் – சோ. மோகனா – அறிவியல் வெளியீடு
பழமையான ஞானம், புதுமையான உலகம் – கண்ணதாசன் பதிப்பகம்
லியா டால்ஸ்டாயின் கதைகள் – வானவில் புத்தகாலயம்
பேக்கன் முதல் மார்க்ஸ் வரை – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா – விடியல் வெளியீடு
கனவுகளின் விளக்கம் – சிக்மண்ட் ஃபிராய்ட் – நாகூர் ருமி – ஸ்நேகா பதிப்பகம்
புதுமையான விஞ்ஞான சிறுகதைகள் - வெ.தமிழழகன்
The Dalai Lama – A Policy of Kindness – புத்தக கண்காட்சிக்கு வெளியே பழைய புத்தகக் கடையில் கிடைத்த வைரம்
The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde – Robert Louis Stevenson
The New Quotable Einstein – Princeton Press
Davinci Code – Dan Brown
I too had a love story – Ravinder Singh
Alice in wonderland – Lewis Carroll – கிட்டத்தட்ட நான்கு வெவ்வேறு பதிப்பகங்களில் வாங்கி விட்டேன். இன்னும் வேறு பதிப்பகங்களில் வந்தாலும் வாங்குவேன்.
கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிய கிளாசிக் மொழிப்பெயர்ப்புகள்:
டேவிட் காப்பர்ஃபீல்ட் – சார்லஸ் டிக்கன்ஸ் – தமிழில் எஸ். ராஜேஷ்வர்
பிளாக் பியூட்டி –அன்னா சிவெல் – தமிழில் சென்னி
எண்பது நாள்களில் உலகப் பயணம் – ஜுல்ஸ் வெர்ன் – தமிழில் அ.குமரேசன்
மொஸார்ட் – பா.ராகவன்
கால இயந்திரம் – எச்.ஜி.வெல்ஸ் – தமிழில் இம்மானுவேல் பிரபு
ஐசக் நியூட்டன் – பாலு சத்யா
ஆலிவர் ட்விஸ்ட் – சார்லஸ் டிக்கன்ஸ் – தமிழில் என். ராஜேஷ்வர்
கோழை சிங்கமும் பசித்த புலியும் – எல்.ஃப்ராங்க் பாம் – தமிழில் கி.ரமேஷ்
மூன்று துப்பாக்கி வீரர்கள் – அலெக்சாண்டை டூமாஸ்
மாயன் நாகரிகம் – எஸ்.எல்.வி.மூர்த்தி
எகிப்திய நாகரிகம் - எஸ்.எல்.வி.மூர்த்தி
அண்டார்டிகா – முகில்
புதையல் தீவு – ராபர்ட் லூயி ஸ்டேவன்சன்
செவ்விந்தியர் தலைவன் கடத்தல் – ஒ.ஹென்றி
ரைட் சகோதரர்கள் – குகன்
ரயிலின் கதை – ஏ.ஆர்.குமார்
கன்ஃபூஷியஸ் – என்.ராஜேஷ்வர்
பணத்தின் கதை – செல்லமுத்து குப்புசாமி
ஜென் கதைகள் – எழில் கிருஷ்ணன்
பெட்ரோல் – ஒர் அறிமுகம் – ஏ.ஆர்.குமார்
மா-சே-துங் – மருதன்
லியனார்டோ டா வின்ச்சி - மருதன்
ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? – லியோ டால்ஸ்டாய்
பூமியின் மையத்துக்கு ஒரு பயணம் – ஜுல்ஸ் வெர்ன் – தமிழில் அ.குமரேசன்
நேரம் கிடைக்கும் போது இந்த புத்தகங்களை பற்றிய விமர்சனமும் எழுதுகிறேன். ஆனால் அதற்கு முன் இத்தனையையும் படிக்க வேண்டுமே! ஆனால் சில புத்தகங்களை படித்துவிட்டேன். அதனால் கூடிய சீக்கிரம் விமர்சனங்களை எதிர்ப்பாக்கலாம்.