நான் ஒரு எழுத்தாளன் என்பது பெரும்பாலோனோருக்குத் தெரியாது என்பதால் முதன்முறையாக அதனைத் தெரிந்துக் கொள்ளும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளும், கூறும் அறிவுரைகளும்:
- இலக்கியம் பத்தி எழுதுங்க சார். மத்தப் படி சாதாரணமா எழுதி பேரக் கெடுத்துக்காதிங்க. (யார் பெயரை!)
- வினோத் சார். ஜனரஞ்சகமா எழுதுங்க. இந்த இலக்கியப் பூர்வமா எழுதுறேன்னு புரியாம ஏதாவது கிறுக்காதீங்க.
- உங்களுக்கு அறிவியல் நல்லாத் தெரியுமே. அத மட்டும் எழுதுங்க.
- புக்கு எழுதுனா குடுங்க படிச்சிட்டுத் தரேன். ஆனா எனக்கு புக்கு படிக்கிற பழக்கம் இல்ல…..
- எவ்வளவு காசுத் தருவான் ஒரு புக்குக்கு…..
- ஏடாகூடமா எழுதி வம்முல மாட்டிக்காதீங்க சார்….
- அரசியல் பத்தி எழுதுங்க சார். ஆமா, நீங்க தி.மு.க வா?, இல்ல ஆ.தி.மு.க வா?.
- நான் கூட நிறையா எழுதியிருக்கேன். நீங்க படிச்சிப் பாத்துட்டு நல்லாயிருந்தா கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுங்க சார். காசு எல்லாம் ரொம்ப வேணா. ஏதோ கொஞ்சம் குடுத்தாப் போதும்!
- ஏதாவது நாலு புக்குல இருந்து சுட்டு ஒரு புக்கு போட்டிடுவீங்களே!
- எதுக்கு இந்த தேவ இல்லாத வேல?
- புக்கு ரிலீஸ் பண்ணா பார்ட்டி? ட்ரீட் எல்லா இருக்குல?
- புக்கெல்லாம் ரிலீஸ் பண்ணுற. பெரிய ஆள் தா. எப்படியும் நிறைய காசு வரும். எனக்கு ஒரு இருபதாயிரம் காசு வேணும். அதான் ரைட்டர் ஆகிட்டியே. தரிங்களா?
இதை publish செய்த பின் ஒரு அன்பர் என்னை தொலைப்பேசியில் அழைத்து, தனக்கு இதுவெல்லாம் வேண்டாம் வெறும் நான் எழுதும் அனைத்துக்கும் copy rights வேண்டும் என்றார். மேலும் இதனை பதிமூன்றாவது பாயிண்டாக சேர்க்கவும் சொன்னார். எனவே,
13. புத்தகம் நீங்களே எழுதுங்க, ஆனா copy rights மட்டும் எனக்கு குடுத்துடுங்க.....
(என்ன சங்கீதா மேடம், இப்போ சந்தோஷமா!)
வினோத் குமார்
No comments:
Post a Comment