இரண்டு கிரேக்கர்கள் தனித்தனியாக ஒரே மாதிரியாக யோசித்து உண்மையைக் கண்டறிந்தார்கள் என்று
முன்னரே கூறினேன். அவர்கள் மூன்று காரணங்களை வைத்து பூமி தட்டையாகவோ, வட்டமாகவோ அல்லது
சிலிண்டராகவோ இருக்காது என்று கூறினர்.
முதல் காரணம்: சந்திர கிரகணத்தின் போது சந்திரன் மீது விழும் நிழல் பூமியுடையதோ என்று அவர்கள் சந்தேகப்பட்டனர். அப்படி அது பூமியின்
நிழலாக இருக்கும்பட்சத்தில் அது ஏன் எப்போதும் வட்டமாகவே விழ வேண்டும்?
பூமி வட்டமாக இருந்தால், எல்லா நேரங்களிலும் நிழல் வட்டமாக விழாது. சில நேரங்களில் அது நீள்வட்டமாக
விழுந்துவிடும். அல்லது பூமி ஒரு சிலிண்டர் வடிவமாக இருந்தாலும் அதன் நிழல் வட்டமாக
விழாது. ஆனால் எப்போதுமே பூமியின் நிழல் வட்டமாக விழுவதை அவர்கள் கவனித்து வந்திருக்கிறார்கள்.
ஏனெனில் கிரேக்கர்கள் பல வருடங்களாகவே கிரகணத்தை ஆராய்ந்திருந்தனர்.
இரண்டாவதுக் காரணம்: கடலில் கப்பல் செல்லும் போது, அது தூரமாக சென்ற பின் முதலில் அதன் அடிப்பாகம் மறைந்து, பின்னர் அதன் மேல் பாகம்
மறைவது!
ஒருவேளை, பூமி தட்டையாக இருந்தால் அடிப்பாகமோ மேல்பாகமோ,
எல்லாமே ஒரேடியாக மறையவோ அல்லது முழுவதும்
மறையாமல் தெரியவோ வேண்டும். ஆனால் அப்படியில்லாமல், முதலில் அடிபாகமும் பின்னர் மேல்
பாகமும் மறைய காரணம் என்னவாக இருக்கும் என்று
யோசித்தனர்.
மூன்றாவதுக் காரணம்: கிரேக்கர்கள் அப்போதே துருவ நட்சத்திரத்தை பற்றி அறிந்திருந்தனர். பூமத்திய ரேகை பகுதியை நோக்கிச் செல்லச்
செல்ல துருவ நட்சத்திரம் வானில் கீழே இறங்கிவிடுவதையும், துருவப் பகுதி (வட துருவம்) நோக்கிச் செல்லச் செல்ல துருவ நட்சத்திரம் அவர்கள்
தலைக்கு மேல் செல்வதையும் அவர்கள் கவனித்தார்கள்.
பூமி தட்டையாக இருப்பின் இது சாத்தியமே இல்லை! பூமி தட்டையாக இருந்தால் நாம் எங்கு இருந்தாலும் துருவ
நட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும்.
மேற்சொன்ன மூன்று காரணங்களும், பூமி உருண்டையாக இருந்தால் தான் சாத்தியம். அது தட்டையாகவோ, வட்டமாகவோ
அல்லது சிலிண்டராகவோ இருந்தால் சாத்தியமேயில்லை.
எனவே இந்த மூன்றுக் காரணங்களை வைத்து அவர்கள் இந்த பூமி உருண்டை வடிவத்தில் தான் உள்ளது என்ற
முடிவுக்கு வந்தனர்.
அது சரி, யார் அந்த இரண்டு கிரேக்கர்கள்? என்று தானே கேட்குறீர்கள். ஃபைலோலாஸ் மற்றும் அரிஸ்டாட்டில்
என்பவர்களே அவர்கள்.
ஃபைலோலாஸ்
முன்னவர் கி.மு 450 மற்றும் பின்னவர் கி.மு. 380 ஆண்டுளைச் சார்ந்தவர்கள். இருவரும் தனித்தனியே
இதுப் பற்றி கண்டறிந்தனரோ அல்லது ஃபைலோலாஸ் முன்மொழிந்து அதை அரிஸ்டாட்டில் வழிமொழிந்தாரோ.
ஆக மொத்தம் பூமி ஒரு கோளம் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
அரிஸ்டாட்டிலே சொன்னதற்குப் பிறகு பூமியின் வடிவம் பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் அதன் பின் ஏற்படவேயில்லை. ஏனெனில் அரிஸ்டாட்டிலுக்கு அந்த காலத்தில் அவ்வளவு மவுசு!
அரிஸ்டாட்டில்
ஆனால் இன்றும் கூட சில நாடுகளில் பூமி தட்டையானது என்று கூறி சில கிளப்புகள் உள்ளன. அதில்
பலர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும், நாம் பூமியை செயற்கைக் கோள் வழியாகப் படம் பிடித்துக் காட்டினாலும்
அவர்கள் நம்புவதாக
இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் காணும் நிலப்பகுதி
தட்டையாக
இருப்பதால் பூமி முழுவதுப் தட்டையாகவே இருக்கும் எனும்
அனுமானத்திற்கு அவர்கள் வந்து
விட்டனர்.
எது எப்படியோ, நமது முன்னோர்கள் பூமி உருண்டை என்று கண்டுப்பிடித்து விட்டார்களே அதுவேப் போதும்.
பை த வே, பூமி உருண்டை என்பது இருக்கட்டும். அது எவ்வளவு வளைந்திருக்கிறது என்றுத் தெரியுமா?
பூமியில் 8000 மீட்டர்கள் பயணம் செய்தால் சரியாக பூமி 5 மீட்டர் கீழிறங்கும். இதனைச் சொன்னவர்
கலீலியோ.
பூமிப் பற்றி சரி, வானம் பற்றி கிரேக்கர்கள் என்ன நினைத்தார்கள்?
அடுத்த கட்டுரையில்!
(இனி வானம் பற்றி அறிவோம்)
வினோத் குமார்
No comments:
Post a Comment